.

.
.

Friday, July 24, 2009

ஆத்மா

வணக்கம் நண்பர்களே, இந்த இனிய மாலை வேலையிலே உங்களோடு பகிர்ந்துகொள்ள மேலும் சில சங்கதிகளை முன்னெடுத்து வந்திருக்கிறேன். முத‌லாவ‌தாக‌ த‌மிழ்ப்பூங்காவின் ந‌ண்ப‌ர்க‌ள் வ‌ரிசையை பாருங்க‌ளேன்! கண்கவரும் க‌ருஞ்சிவ‌ப்பு பின்புல‌த்தில் சிற‌கு விரித்த‌ ஒரு வெண்புறா ப‌ற‌ந்து கொன்டிருக்கிற‌தே க‌ண்டீர்க‌ளா? இந்தப் புறா சில காலமாகவே தமிழ்ப்பூங்காவில் பற்ந்து கொன்டிருக்கிறது, பல அலுவல் மிகுதியால் அந்தப் புறாவை இன்றுதான் வரவேற்க வழிபிறந்தது! உங்கள் அனைவருக்கும் ஏற்கனவே அறிமுகமானவர்தான், த‌மிழ் கூறு ப‌திவுல‌க‌ம் நன்க‌‌றிந்த தோழி சுபா! சுபா! சுபா!

பிரபல பதிவர், மூத்த பதிவர் என எந்தவொரு பந்தாவும் இல்லாமல் வரவு தந்து தமிழ்ப்பூங்காவை சிறப்பித்த அவர்களை வருக வருகவென அன்போடு வரவேற்கிறேன்!

பதிவர் சுபா அவர்கள் மிகவும் சிறப்பான படைப்புகளை தருவது அனைவரும் அறிந்த விடயமே, அவரது படைப்புக்களில் சமூகப் பற்று மிளிர்வது பாராட்டத் தக்கதோர் விடயமாகும், நட்பைப் போற்றும் இவருக்கு குறை ஒன்றும் இல்லையென "குறை ஒன்றும் இல்லை" எனும் பதிவர் குறை ஒன்றும் இல்லாமல் கொடுத்துவிட்டார் "சுவாரஸ்ய பதிவர் விருதை" நாமும் குறை ஒன்றும் இல்லாமல்‌ தோழி படைப்புலகில் மேலும் சிறந்த‌ பதிவுகள் பல த‌ந்து பட்டாம் பூச்சி, விட்டில் பூச்சி, கரப்பான் பூச்சி என ஒரு பட்டத்தையும் விட்டு வைக்காமல் அனைத்தையும் பெற்று குறை ஒன்றும் இல்லாமல் நலமே வாழ‌ வாழ்த்தி வரவேற்போம் ,சரி பாராட்டு விழாவை இத்தோடு முடித்துக்கொன்டு நாம்....(சுபாவுக்கு ஒரு பாட்டு போட்டேயாகனும் என பல குரல்கள்!!!!) சரி, சரி, நமது தோழி சுபாவுக்காக இதோ....

"வெற்றிக்கொடி கட்டு மலைகளை ......" எனும் வீரமிகு படையப்பா படப்பாடல்"
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
"இரா" என்றோர் படம், இது ஆவிகளின் ஆதாரத்தைத்தேடும் ஒரு படமென சில காலங்களுக்கு முன் விளம்பரப்படுத்தப்பட்ட ஒரு படம், இந்தப் படத்தின் உச்சக்கட்ட மர்மமாக காலஞ்சென்ற கவியரசு கண்ணதாசன் அவர்களின் ஆவியின் துணைகொன்டு ஒரு பாடல் புனையப்பட்டுள்ளதாக செய்தி!

http://www.tamilcinema.com/CINENEWS/Hotnews/2008/october/221008a.asp

சி.எம்.இரத்தினசாமி என்ற ஆவியுலக மீடியம் மூலம் இந்த விஷயத்தை சாதித்ததாக சொல்கிறார்கள் படத்தின் இயக்குனர்கள் (இந்த படத்திற்கு மூன்று இயக்குனர்கள்) தான் எழுதிய இயேசு காவியம் கவிதை வடிவத்தை முடிப்பதற்கு முன்பாகவே இறந்து போனார் கண்ணதாசன். அவரது ஆவியை அழைத்து இந்த காவியத்தை முடித்துக் கொடுத்தவராம் இந்த இரத்தினசாமி. நான் முன்னே பின்னே கவிதை எழுதியதே இல்லை. என் கையால் அவர் எழுதினார் என்று இரத்தினசாமி கொடுத்த கவிதை இது.
கவியரசருக்கேயுரிய தாளக்கட்டு... வியப்புதான்! இதோ, அந்த பாடல்

மெய்யோடு பொய்யாக ஊர்தூங்கும் நேரம்
இருளோடு ஒளியிங்குபோர் செய்யும் காலம்
கோட்டானும் சாத்தானும் இரைதேடும் ஜாமம்
இருந்தாலும், இறந்தாலும்பொல்லாது ஏமம்..
ஆகாயம் இருள்கொண்டுநிறம் மாறிப் போகும்
நிழல்கூட நிஜம் என்று மனம் இங்கு வாடும்
ஆன்மாக்கள் குடியேற கூடொன்றை தேடும்...
எதைத் தேடி அலைந்தாலும்ஆட்கொள்ளும் ஏமம்...
@@@@@@@@@@@@@@@@@@@@@@
இந்தச்செய்தியை இங்கே படைத்ததற்கு காரணம் ஒன்று உண்டு, அது......

முன்கதை : நாகரீகம் ஆட்கொள்ளாததோர் தோட்டம், "லயம்" எனும் காரைபடிந்த கரும் பச்சை பலகை வீடுகள், ஏழ்மையின் பிடியில் எமது மக்கள், அதிலே ஒரு 20 வயது அழகுப்பெண், அவள் ஒரு லாரி ஓட்டுனரை மணந்து ஒரு அழகிய ஆண் குழந்தையைப் பெற்றாள், சில காலத்தில் அவள் கணவன் ஒரு விபத்தில் பலியாக அந்த அபலை கண்ணில் நீரோடும், கையில் குழந்தையோடும் அநாதையானாள்...
வாழ்விழந்த அவள் சோகமும் நிலைகுலைந்த அவள் இளமையும் அவளை தவறான பாதைக்கு இட்டுச்செல்லும் முன் அந்த தோட்டத்தில் கடை வைத்திருந்த ஒரு சீனருக்கு அவள் மேல் அன்பு பிறந்தது, ஆனால் அவர் ஏற்கனவே திருமணமானவர், அழகான அந்தப் பெண்ணை தோட்டத்துக்கு ஒதுக்குப்புறமாக தமக்கு சொந்தமாயிருந்த இருந்த ஒரு செம்பனைக்காட்டு ஓரத்தில் தனது குடிசை வீடொன்றில் குடிவைத்தார். பல ஓநாய்களிடம் சிக்கிச் சீரழிவதைக் காட்டிலும் சீனராய் இருந்த போதும் இரண்டாவது மனைவியாய் ஏற்றுக்கொள்ள முன்வந்த அவரை அந்தப் பெண்ணும் விடாப்பிடியாக பற்றிக்கொன்டு வாழ்வில் மேலெழுந்தாள்! மேலும் இரு குழந்தைகள் பிறந்தன!

எல்லாமே அமைவது எங்காவது இறைவனுக்குப் பிடிக்குமா? அந்தப் பெண்ணின் இரண்டாவது கண்வராகிய சீனருக்கு அவளின் முதல் கணவனின் குழந்தை சிவாவை அற்வே பிடிக்காமல் போனது, சிறுவன் சிவா, 6,7 வயதிற்குள் இருப்பான், அழகான வரிசைப்பற்கள், களையான முகம், துரு துருவெனும் குழந்தைகளுக்கே உரிய விளையாட்டுத்தனம் என எல்லாம் அமைந்திருந்தும் அவன் அவருக்கு வேப்பங்காயாக கசந்தான். அவனுக்கு தாயாக வாய்த்தவளோ இவனாள் தன் வாழ்வை இழந்து விடக் கூடாது எனும் கையறு நிலையில், இவனை புறக்கனிக்கத் துவங்கினாள், அவன் தேவைகள் சரிவர நிறைவேற்றப்படாமல், நல்ல துணி மணிகள் அணிவிக்கப்படாமல், உணவுக்கும் வழியில்லாமல் தோட்டத்து வீதிகளில் வளைய வந்தான் அந்த பாவப்பட்ட சிறுவன்! யார் செய்த பாவமோ, அவன் முன் ஜென்மத்து கர்மமோ, அவன் காப்பாற்றப்பட வேண்டிய தாயாலேயே கைவிடப்பட்டான், பகலெல்லாம் தோட்டத்தில் அழுக்கான தோற்றத்தோடு, கிழிசல் ஆடைகளோடு சுற்றிச் சுற்றி வருவான் சிவா எனும் அந்தச் சிறுவன், பாவப்பட்ட சில நல்லுள்ளங்கள் அவனுக்கு வீட்டில் எஞ்சியிருக்கும் கொஞ்ச நஞ்ச உணவுகளைக் கொடுத்துப் பசியாற்றும்! அவர்கள் வீட்டில் இருக்கும் குழந்தைகளைக் கொஞ்சிக்கொன்டும், விளையாடிக்கொன்டும், தூக்கி வைத்துக் கொன்டும் பொழுதைப்போக்கும் அவனுக்கு இரவில் உறங்க மட்டும் அந்த வீட்டின் ஒரு மூலையில் சீனனின் கண்களுக்கு மறைவாக ஒரு இடம் ஒதுக்கி வைத்திருந்தாள் அவன் தாய்!
காலம் காற்றைப்போல கண்ணுக்குத் தெரியாமல் விரைந்து மறைந்து கொன்டிருந்தது, அந்த நாளும் வாசல் தட்டியது, அன்று அந்தப் பெண்மணி எதற்காகவோ வெளியே புற‌ப்பட்டாள், 3 வயது, 1 வயது ஆன தனது குழந்தைகளில் ஒன்றைத் தோளிலும், ஒரு குழந்தையைக் கையிலும் பிடித்துக் கொன்டாள், சிவாவையும் அதிசயமாக உடன் அழைத்துக்கொன்டு செம்பனைக் காடு கடந்து வீதி வழியே அருகாமைப் பட்டணத்திற்கு நடந்த படியே புறப்பட்டாள். தோட்டம் கடந்து பட்டணம் துவங்கும் அந்த முச்சந்தியில் வாகன நெரிசலோடு கூடிய ஒரு பெரிய கரும் பாம்பாய் நெளிந்து வளைந்த மிகப்பெரிய சாலை, நடுவில் வெள்ளைக்கோடைப் பூசிக்கொன்டு, வாய் பிள‌ந்து ஓருயிரைப் பழிவாங்கப்போகும் வேளைக்குக் காத்துக்கொன்டு....

உச்சி வெயில் மண்டையை பிளக்கிறது, இருபுறமும் சாலை பார்த்து அவசர அவசரமாய் சாலையைத் தன் குழந்தைகளொடு கடக்கிறாள் அந்தப் பெண். அக்கரை தாண்டித் திரும்பிப்பார்க்கிறாள்! சிறுவன் சிவா மட்டும் துணையின்றி தனியாக‌, அந்தச் சிறுவனை கைபிடித்து அவன் தாய் சாலையைக் கடக்க உதவவில்லை, அம்போ என மறுகரையில் சிவா...
வா! வா! வந்துவிடு அவன் தாய் விரைந்து கூவுகிறாள்! தாய் அழைக்கிறாள் எனும் துணிவில் அவன் விரைந்து சாலையில் குறுக்கே ஓட, எதிரே எமனாய் வந்த அந்த எமகாதக லாரி பஞ்சுபோன்ற அந்தப் பிஞ்சு உடலை மோதி அந்த ராட்சத லாரியின் சக்கரம் அவன் தலையில் ஏறி நொருக்க, துடிதுடித்து அந்த இடத்திலேயெ தலை சிதறி மூளை வழிந்தோட‌ பிணமானான் சிறுவன் சிவா!

பொருப்பற்ற தாய்! இருந்தாலும் அவள் தோட்ட மக்களின் துணை கொன்டு சிதறிக்கிடந்த அவன் உடலை சேகரித்து வந்து அடக்கம் செய்தாள். கடமை முடிந்ததென கை கழுவிக் கொன்டாள். அவளால் அவனின் உடலை மட்டும்தான் அடக்கம் செய்ய முடிந்தது! அலைபாயும் அவன் ஆத்மா?
அகால மரணமடைந்த சிவாவின் ஆத்மா கேட்பாரற்று அந்தக் காட்டு வீட்டில் அலை பாயத்துவங்கியது.

அது தனை வஞ்சித்த தன் தாயை பல கோணங்களிலும் துன்புறுத்தத் துவங்கியது, நிழ‌ல் உருவங்களாகவும், தீய கனவுகளாகவும், பல இன்னல்களுக்கு ஆளாகி ஏறக்குறைய அரைப்பைத்தியமானாள் சிவாவின் தாய்! மேலும் துன்பங்களை தாங்கும் வலிமை இழந்து ஒரு நாள் சிவாவின் உடமைகளை அந்த வீடு முழுக்க இரைத்துவைத்து விட்டு யாரிடமும் ஏதும் சொல்லாது தன் இரு குழந்தைகளோடு அந்த வீட்டை விட்டே ஓடிப்போனாள் சிவாவின் தாய்! அவள் எங்கே போனாள்? என்ன ஆனாள் என்பது யாருக்குமே தெரியவில்லை!

இருள் கவிந்த செம்பனைக்காடு, ஆளரவமற்ற மயான அமைதி, அத்தாப்புகள் சிதைந்து ஒழுகி சிதிலமடைந்த வீடு! தீபகற்பமாய் வீட்டைச் சூழ்ந்த முன்புற ஆறு, இரு மருங்கிலும் சிறு கால்வாய்களாய் நீரோட்டம். சிவாவின் ஆத்மா தனிமையின் வெறுமையில் துணையின்றி சூன்யமாய் காற்றோடு காற்றாக அங்கே அலைபாய்ந்து கொன்டிருக்க‌...
வாழ வழிதேடி ஒரு சிறு குடும்பம் அந்த தோட்டத்தில் காலடி வைக்கிறது, தோட்டத்தில் வேலை இல்லை, அதனால் தோட்டத்து வீடு இல்லையென்றாகிவிட்ட நிலையில், வீடு தேடித் தேடி, ஆகக் கடைசியாக வேறு வழியில்லாமல் 15 வெள்ளி வாடகை பேசப்பட்டு அந்தக் குடும்பம் அந்த வீட்டின் பூர்வீகம் உணராது அதில் குடியேறுகிறது, அப்பா, அம்மா, 7 வயது பெண் 4 வயது பெண் 1 வயது ஆண் என மூன்று குழந்தைகள்!
அவர்கள் அறியாத ஒன்று...
அங்கே சிவாவின் ஆத்மா அவர்களை சூன்யமாய் வெறித்து நோக்கிக் கொன்டிருக்கிறது... ‌

10 comments:

VIKNESHWARAN said...

வாவ்... கவரும் எழுத்து நடை.... இரசித்து படித்தேன்...

tamilvanan said...

திகில் கதை சிறப்பு.

அப்புறம் என்ன அதான் அடுத்த குடும்பம் குடியேறிருச்சுல, இதையே ஒரு மெகா தொடரா போட்டுர வேண்டியது தானே.

உள்ளுக்குள்ள திறமைய வெளிய காட்டு மக்கா..
அதான் நாங்கள்ளாம் இருக்கோம்ல.. ஆகா ஓஹோன்னு பின்னோட்டம் போடுருதுக்கு.
மனசாட்சி ( காசுக்கு டிமி்க்கியா கொடுக்கிற, மக்கா உன்னை எதிலாச்சயம் மாட்டி விட்டுதான் மறுவேலை)
எங்களுக்கும் இருக்குதுல .... மனசாட்சி

ஆமா....., இது சுட்ட கதையா... சுடாத கதையா ( உண்மைக் கதையா கற்பனை கதையான்னு கேட்டேன் )

நாமக்கல் சிபி said...

//இந்தப் புறா சில காலமாகவே தமிழ்ப்பூங்காவில் பற்ந்து கொன்டிருக்கிறது, பல அலுவல் மிகுதியால் அந்தப் புறாவை இன்றுதான் வரவேற்க வழிபிறந்தது! உங்கள் அனைவருக்கும் ஏற்கனவே அறிமுகமானவர்தான், த‌மிழ் கூறு ப‌திவுல‌க‌ம் நன்க‌‌றிந்த தோழி சுபா! சுபா! சுபா!//

சமானப் புறா சுபா வாழ்க!

குறை ஒன்றும் இல்லை !!! said...

அப்புறம் அந்த குறை ஒன்றும் இல்லாத ஆள் நான் தானுங்க சாமியோ.......

சுபா said...

ஆஹா..நம்மல பற்றிதான் டோப்பிக் :)
ரசித்தேன் :)

சிவனேசு said...

சிவனேசு : நன்றி நண்பா!

ம‌ன‌சாட்சி : பாடிய‌ புலவனை பாடியே திருப்பி அனுப்பிய ராஜா மாதிரி, இப்படி பாராட்டி பாராட்டியே அமெள‌ன்ட்ட‌ க‌ழிச்சிடுவாறோ! :(

சிவனேசு said...

tamilvanan said...

//( காசுக்கு டிமி்க்கியா கொடுக்கிற, மக்கா உன்னை எதிலாச்சயம் மாட்டி விட்டுதான் மறுவேலை)//

ஆஹா, தலைக்கு நம்ம தந்திரம் புரிஞ்சுபோச்சு போல! அலாட்டாயிக்க சிவனேசு! அலாட்டாயிக்க!

சிவனேசு said...

நாமக்கல் சிபி

சிவனேசு : வணக்கங்க அண்ணாச்சி, உண்மையை ஒத்துக்கங்க, நீங்க தானே புறாவைக் காப்பாத்துன சிபிச்சக்கரவர்த்தி! எப்ப‌டிக் க‌ண்டுபிடிச்சேன் பாத்திங்க‌ளா!)

ம‌ன‌சாட்சி : நன்றி விக்கினேசு! (இந்த‌ உண்மையை வாழ்க்கைப்ப‌ய‌ண‌ம் விக்கி தான் சொன்னாருன்னு இவ‌ருகிட்ட‌ சொல்ல‌வே கூடாது!)

சிவனேசு said...

குறை ஒன்றும் இல்லை !!!

//அப்புறம் அந்த குறை ஒன்றும் இல்லாத ஆள் நான் தானுங்க சாமியோ.......//

வாங்கய்யா வாங்க, உங்களைத்தான் தேடிக்கிட்டிருந்தேன்! நாம பேசிக்கிட்டபடியே உங்க பேர‌ போட்டாச்சு! அமெளன்ட்ட எப்ப வெட்டறிங்க?

சிவனேசு said...

சுபா

//ஆஹா..நம்மல பற்றிதான் டோப்பிக் :)
ரசித்தேன் :)//

நல்ல வேளை ஏன் என்னை வரவேற்க இவ்ளோ லேட்டுன்னு ஏசுவிங்களோன்னு நினைச்சேன்பா!