.

.
.

Monday, July 27, 2009

ஆத்மா (||)

வணக்கம் நண்பர்களே, அங்கே புதுசா ஓரத்திலே ஒருத்தரு நாற்காலி போட்டு உட்கார்ந்திருக்கிறாரே! அந்த ஐயா யாருனு தெரியுதாய்யா?

அவருதான் நம்ம "குறை ஒன்றும் இல்லை" எனும் குறை ஒன்றும் இல்லா நண்பர்! இவரு படத்துக்கு மட்டுந்தான் இப்படி நாற்காலியில உட்கார்ந்து போஸ் குடுப்பாராம், ஆனால் உண்மையில இவரு "நல்லவர் இதயத்தில்தான்" வாடகை, கரண்டு பில், தண்ணி பில் ஏதும் கட்டாமல் இது நாள்வரை குடியிருக்கிறாராம்.(இது அவரே சொன்ன ரகசியம்), அதுக்காக யாரு அந்த இதயத்துக்குச் சொந்தமான நல்லவர் அப்படின்னு நீங்க கேட்கக்கூடாது! சரியா? வருகைக்கு நன்றி நண்பரே! (இதோ நீங்களே விரும்பிக் கேட்டுக்கிட்ட,

"குறை ஒன்றும் இல்லை.. " எனும் பாடல் உங்களுக்கே உங்களுக்காக,
இந்த டைட்டில் சாங்கோடு இன்றைய நமது பாராட்டு விழாவை முடித்துக்கொன்டு பதிவுக்குள் நுழைவோம் வாருங்கள்!
#########################################
குறை ஒன்றும் இல்லை! உண்மைதான், ஆயிரம் கக்ஷ்டங்கள் வரட்டுமே! பல நூறு துயரங்கள் தரட்டுமே! குறை ஒன்றும் இல்லை என குதூகலமாக மனதுக்குச் சொல்லிக்கொன்டு வாழ்வை வெல்ல வேண்டும் எனும் வீரத்தோடு வாழ்வை எதிர்கொள்ளும் மனிதனே ஆண்டவனின் அன்புக் குழந்தையாகிறார். துணிவு, தன்னம்பிக்கையை துணைகொன்டு வெற்றிக்கனியை எட்டிப்பறிக்கிறார். ஆனால் எல்லோராலுமே அந்த மேன்மையான மனப்பக்குவத்தை வளர்த்துக்கொள்ள முடிகிறதா என்ன ? அத்தகையோர் வருத்தமே வாழ்க்கை, சோகமே சொந்தம் என ஏக்கத்தோடு வாழ்வை எதிர்கொள்கின்றனர்! இதில் அலைபாயும் மனதில் விளைந்த ஆயிரத்தெட்டு நிறைவேறாத ஆசைகள் வேறு!
துயரம் தோய்ந்த வாழ்க்கை, ஏமாற்றங்களால் அலைக்கழிக்கப்பட்ட இதயங்கள், ஆற்றுவாரும் தேற்றுவாரும் இன்றி நொந்து நூலான நெஞ்சம்! என‌ வாழ்க்கைச்சுழலில் சிக்கி வதைபடும் இந்த மானிடர்கள் அதிலிருந்து மீளாமலேயே மரணத்தைத் தழுவும்போது, அவர்தம் ஆத்மாவானாது சாந்தியடைய மறுக்கின்றது! வாழும் உயிர்களுக்கும் இவை மரணத்தைப் பரிசளித்துத் தன்னோடு சேர்த்துக்கொள்ள துடிக்கின்றன!
ஒரு சிறுவனாயிருந்த போதும் முறையான கண்கானிப்பும், பராமரிப்பும் அற்ற நிலையில் உணவு, உடை, உறைவிடம் என சகல தேவைகளுக்கும் ஏங்கி, தன் தாயின் அஜாக்கிரதையால் சாலை விபத்தில் துடிதுடித்து மாண்ட சிவாவின் ஆத்மாவும் இதே முறையில் எல்லையில்லா கோபத்தோடு தன் தாயைப் பழிவாங்குகிறது! இருப்பினும் தன் கோபம் அடங்காது ஆவேசமாய் அந்த வீட்டில் திரிந்துகொன்டிருக்கிறது, அப்போது வாழ்வுதேடி வந்த ஒரு ஏழைக்குடும்பம் அவ்வீட்டில் குடியேறுகிறது, இனி...
அந்த வீட்டைப் பார்த்ததுமே மனதுக்குள் ஆணியடித்ததைப் போலிருந்தது சுசிக்கு, எனினும் தனது அச்சத்தையும், வருத்தத்தயும் வெளிக்காட்டாது, விரைந்து வீட்டைத் தூய்மை செய்தாள், கணவனும் கைகொடுக்க, அந்த வீடு முழுக்க இரைந்திருந்த துணிமனிகள் பாத்திரங்கள், ஓட்டை உடைசல்கள் என ஒன்றுவிடாது, கழுவினார், குப்பைகளை அள்ளிப்போட்டு எரிக்கும்போது, மூக்கைத்துளைக்கும் தீய வாடை புற‌ப்பட்டதையும் யாரும் கவனிக்கவில்லை, சுசியைத்தவிர!
ஆயிற்று, வீட்டைச் சுத்தம் செய்து, தட்டு முட்டுச் சாமான்களை ஏற்பாடு செய்து, சமையலும் செய்து, வெற்றிகரமாக வாழ்க்கை துவங்கியது அந்த வீட்டில்..., ஆனால் சுசியின் மனம் மட்டும் என்னவோ செய்துகொன்டிருந்தது, தனக்கு தோன்றிய தெய்வங்களையேல்லாம் மனதுள் துணைக்கழைத்துக்கொன்டிருந்தார் அவர்.
அன்றைய இரவு, தூக்கம் வராமல் படுக்கையில் புரண்டு கொன்டிருந்தார் சுசி! காலையிலிருந்து ஏகப்பட்ட வேலை, அசதி உடலைப் பதம் பார்த்தது தூங்கு, தூங்கு என கட்டளையிட்டுக்கொன்டிருந்தது, ஆனால் மனம் மட்டும் ஏனோ விழித்துக்கொன்டு கண்ணாமூச்சி ஆடிக்கொன்டிருந்தது! காலையிலிருந்து நடந்தவற்றை அசைபோட்டுப்பார்த்தார், வீடு க‌ழுவும் போது அந்த சமையலறை ஓரத்திலிருந்து வழிந்தோடிய அழுக்குச்சிவப்புக்கறை, இரத்தம் போலவே இருந்ததே( உண்மையில் அது சிவாவின் படுக்கை இடம்!) என்னவாக இருக்கும்? பிறகு வீடுமுழுக்க சிதறிக்கிடந்ததே சிறுவனின் உடைமைகள், அதிலென்ன மஞ்சள் மஞ்சளாய் பூசணமாய் பூஞ்சைக் காளான்கள் பிடித்து? எரியும் துணிகளில் ஏன் அத்தனைத் தீய நாற்றம்? ஒன்றன்பின் ஒன்றாக நினைவுகள் கேள்விச்சரங்களாக நெஞ்சுக்குழியில் பஞ்சாய் அடைக்க விட்டத்தையே வெறித்து நோக்கிக் கொன்டிருக்கிறார்,
அருகில் அவர் கணவர் ர‌யில் வண்டியாய் குறட்டைகளை அவிழ்த்துவிட்டபடி அயர்ந்து உறங்க..., இருவருக்கும் நடுவில் இளையவன் வேலன், இரண்டாமவள் மணிமொழி, மூத்தவள் அங்கையற்கன்னி என குடும்பமே அன்று அந்த வீட்டின் வரவேற்பு அறையில். சாக்குப்பை திரியோடு அரையடி உயரத்தில் ஒரு மண்ணெண்ணெய் விளக்கு ஒற்றைக்கண் திறந்தபடி மங்கலாய் மஞ்சள் வெளிச்சத்தை பரப்பிக்கொன்டிருக்கிறது. அவர்களுக்குச்
சற்றே தூரத்து மூலையில் தன் படுக்கை இடத்தில் காற்றாய் உழன்றுகொன்டிருந்த சிவா அவர்களை உற்று நோக்கிக்கொன்டிருக்கிறான், அனைவரையும் மேய்ந்த அவன் கண்கள் அந்த கொழுக் மொழுக்கென்றிருந்த இரண்டாவது குழந்தை மணிமொழியிடம் நிலைகுத்தி நிற்கின்றது! தனது தங்கைகள் அவன் நினைவில்!
தூங்கும் மணிமொழி இதழ் பிரித்து ஏதேதோ புரியாத பாக்ஷையில் மெல்ல முனகிக்கொன்டு பேசுகிறாள், புன்முறுவல் சிந்தியபடி,
அந்த நொடிகள் கனவுலகில் மணிமொழியோடு கைகோர்த்து விளையாடிக்கொன்டிருக்கிறான், சிவா!


13 comments:

குறை ஒன்றும் இல்லை !!! said...

கவுண்டர் : பாத்தியா ? நான் தான் குறை ஒன்றும் இல்லாதவன்னு என்னமோ பெரிய ஜேம்ஸ்பாண்டு மாதிரி சொல்லிட்டு வந்திட்டே .. இப்போ பாரு உன்ன வச்சு ஒரு பதிவையே எழுதிட்டாரு .... இதான் என்ன மாதிரி அடக்கமா இருக்கணும்னு சொல்றது ...

குறை ஒன்றும் இல்லை !!! said...

கவுண்டர் : மத்தபடி உங்க இடுகை நல்லா இருக்குங்க ...

குறை ஒன்றும் இல்லை !!! said...

பாருங்க பாருங்க .. நானும் இப்போ ஒரு மிக மிக பிரபலமான ஒரு பதிவர்.. ரொம்ப நன்றிண்ணே !!

சிவனேசு said...

குறை ஒன்றும் இல்லை(1)

சிவனேசு : அதனாலென்ன நண்பா! உங்கள் பதிவுகளே சொல்கின்றனவே, நீங்கள் பாராட்டப்பட வேண்டியவர் என்று!

மனசாட்சி : ஏம்பா, உங்கள பாராட்டி இதோட இரண்டு இடுகை போட்டாச்சு, அமெளன்ட்ட கன்ணுலயே காட்டலயே? இப்படியே போனா கம்பெனிக்கு கட்டுப்படியாகாதேப்பா!

சிவனேசு said...

குறை ஒன்றும் இல்லை (2)

சிவனேசு : பாராட்டுக்கு நன்றி நண்பா! :)

மனசாட்சி : இப்படி பாராட்டி பாராட்டியே கணக்க "தேலி" பண்ணிடுவாரோ!:( (அதிர்ச்சியில் சிவனேசு)

சிவனேசு said...

குறை ஒன்றும் இல்லை (3)


சிவனேசு : அப்படிப்போடுய்யா அரிவாள!

மனசாட்சி : ம‌னுச‌ன் இப்ப‌டி உற்சாக‌ வெள்ள‌த்திலே மித‌ந்துகிட்டு இருக்க‌ப்ப‌வே பேசினபடி அமெள‌ன்ட்ட‌ க‌ரெக்டா வ‌சூல் ப‌ண்ணிர‌னும்!

குறை ஒன்றும் இல்லை !!! said...

சிவனேசு(1),(2) மற்றும் (3)
நான் அவன் இல்லீங்க.. அய்யோ நான் அவன் இல்லீங்க...

சிவனேசு said...

//சிவனேசு(1),(2) மற்றும் (3)
நான் அவன் இல்லீங்க.. அய்யோ நான் அவன் இல்லீங்க//

கிளம்பிட்டாய்ங்கைய்யா!... கிளம்பிட்டாய்ங்கைய்யா!...

அப்போ அந்த நான் அவனில்லை "ஜீவன்" நீங்கதானாய்யா? கவலையே படாதீங்கய்யா! உங்கள தேடுர அந்த அக்காங்ககிட்ட உடனே வச்சிடரேன் வத்தி!

tamilvanan said...

உண்மையிலே இது மெகா தொடரா..... சீரியல் மாதிரி 2 இல்ல 3 வாருஷம் இழுக்குமோ.... ஐயா சாமி் ஆள விடு ... கடவுளே என்ன காப்பாத்து...

ஆமா சிவா நீ நல்லவனா கெட்டவனா ... ( நான் கதையில வர்ற சிவாவை கேட்டன்பா...)

ஒரு பதிவு பின்னோட்டத்துல நம்ம கிருஷ்னா உங்களை தோழின்னு குறிப்பிட்டு இருக்காறே ... நீங்க ஆணா பெண்ணா இல்ல ( இதை சத்தியமா சிவனேசு உன்ன தான்பா கேக்கிறேன்)

குறை ஒன்றும் இல்லை !!! said...

//உங்கள தேடுர அந்த அக்காங்ககிட்ட உடனே வச்சிடரேன் வத்தி//

ஹி ஹி ஹி... ரொம்ப நன்றிண்ணே...

சிவனேசு said...

tamilvanan


சிவனேசு : ஏன் தல, வீரமான இந்த எழுத்துக்களப் பார்த்துமா, இந்த கேள்வி!!!!!?

ம‌ன‌சாட்சி : இவ‌ர‌ ஆஹா ஓஹோன்னு புக‌ழ‌ச் சொல்லி அமெள‌ன்ட்ட‌ வெட்டுனா, ம‌னுக்ஷ‌ன் வில்ல‌ங்க‌ம் ப‌ண்ணுரார்யா! :(

சிவனேசு said...

குறை ஒன்றும் இல்லை

//ஹி ஹி ஹி... ரொம்ப நன்றிண்ணே...//


ஏதோ நம்மால முடிஞ்சது சாமி!!!!

சுபா said...

:) நல்ல பதிவு.