.

.
.

Wednesday, August 5, 2009

ஆத்மா (5)

வணக்கம் நண்பர்களே ! பொழுது போகவில்லை, தமிழ்ப்பூங்காவிலே சிவனேசு சொல்வதை பார்ப்போம் என தமிழ்ப்பூங்காவில் எட்டிப்பார்த்திருக்கும் உங்களுக்கு தொடர்ச்சியாக அதிரடியான பல செய்திகளும் அடாவடியான பல சம்பவங்களும் கீழ்க்கண்ட பதிவுகளில் காத்திருக்கின்றன எனும் பயமுறுத்தலோடு, கடந்த காலத்தின் அமானுக்ஷ்யம் ஒன்றை நிகழ்காலத்தில் அசைபோடலாம் வாருங்கள்!‌

அதற்கும் முன்பதாக இன்று இங்கே ஒரு புதிய நண்பர் நம்மோடு தமிழ்ப்பூங்காவில் இணைந்துள்ளார், அவர் பெயர் "'zeorcc" என்று குறிப்பிடப்பட்டுள்ளது, வித்தியாசமான பெயர்கொன்ட நண்பருக்கு (எங்கே எனக்கு வரவேற்பு என்று கேட்டுகும் முன்பே, நாமே நல்ல பிள்ளையாக) வாழ்த்தும் வரவேற்பும் கூறிக்கொன்டு, நமது இன்றையப் பதிவு இதோ உங்களுக்கே உங்களுக்காக‌...


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


மர்மங்கள் நிறைந்த ப்ரோசல்யான்ந் காடு..!

பிரான்சில் ´இல் எ விலாய்ன்´ (ille- et- vilaine) என்னும் மாவட்டம். ரென் என்னும் இடத்தில் இருந்து 30- கிலோ மீட்டர் தூரத்தில் ´பேன்போ´ என்னும் சிறிய ஊர். 1400- குடும்பங்கள் இன்று வசிக்கின்றது. அந்த ஊரில் இருப்பவர்கள் ´செல்டிக்´ என்ற இனத்தைச் சேர்ந்தவர்கள். இந்த இனத்தவர்களுக்கென்று பாரம்பரிய வரலாறுகள் இருக்கின்றன. இவர்களின் முன்னோர்கள் அனைவரும் சூனியம் செய்பவர்கள். புகழ் பெற்ற மந்திரவாதிகள் இந்த வசம்சத்தில் உண்டு. இவ்வூரில் இந்த இனத்தினர் மட்டுமே வாழ்கிறார்கள். இன்றும் ´செல்டிக்´ இனத்தினர் தொடர்கின்றது. வெளி மனிதர்கள் அந்தப்பக்கமாக போவதோடு, வருவதோடு சரி. யாரும் அங்கு தங்குவதில்லை. அந்த இடமே ஒரு சூன்யம் நிறைந்த மர்மங்கள் பொதிந்த இடம் என்று சொல்லலாம். இவ்வூரில் இருந்து இருந்து தொடங்குகின்றது ப்ரோசல்யான்ந் காடு. 7000- ஏக்கர் நிலப்பரப்பில் இருக்கின்றது இக்காடு.

கிறிஸ்துவ மதம் உருவாக்கப்பட்ட காலத்திய வரலாறு Légende arthurienne ஆண்ட காலங்களில் ´பெருத்தாய்ங்´ உருவாகியது. 12- வது நூற்றாண்டில் ´மெர்லன்´ என்ற மந்திரவாதி அந்த இடங்களில் வசித்திருக்கிறான். அவனுடைய வரலாறுகள் நிறைய உண்டு. அவனுடைய சமாதியும் அந்த காட்டுக்குள் இன்றும் இருக்கிறது. அந்த காட்டுக்குள் நிறைய புரியாத புதிர் நிறைந்த மர்மங்கள் நிறைய உண்டு. அத்துடன் அக்காட்டுக்குள் இரண்டு கோட்டைகள் இருக்கின்றன. ஒரு கோட்டை அழகான ஒரு பெண்ணுக்காக மெர்லன் கட்டியது. மற்றொரு கோட்டையின் பெயர் ´த்ரேசோன்ங்´ (Le Chateau de trécesson) சிறுவயது பெண் ஒருத்தி. அவளுக்கு திருமணமான அன்றைய தினத்திலேயே எதிரிகளால் உயிரோடு மண்ணில் புதைக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டாள். அந்த இடத்தில் கோட்டை கட்டப்பட்டது. அந்த கோட்டை கட்டிய பின் அதில் ஏதோ துர்ஆத்மா இருப்பதாக கருதப்பட்டு வந்தது. அதனால் அதற்கு ´பேய் கோட்டை´ என்ற பெயர் வந்தது. கோட்டை எழுப்புவதற்கு முன்பு அந்த இடத்தில் உயிரோடு புதைக்கப்பட்ட பெண்தான் அக்கோட்டையில் உலவுவதாக சொல்லப்பட்டது. இன்றும் அக்கோட்டையில் ஏதேதோ சத்தங்களும் ஒருவித திகிலும் வருவதுண்டு. மேலும் தகவல்கள்

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


முன் கதை : நீர் பெருக்கெடுத்தோடும் கால்வாயில் ஜல ச‌மாதியாகவிருந்த தன் மகளை தன் அதிரடியான நடவடிக்கையால் நூலிழையில் காப்பாற்றினார் சுசி, அதன் தொடர்ச்சியில் அவ்வீட்டின் மர்ம முடிச்சுகள் மெல்ல அவிழத்துவங்குகின்றன, இனி...

நண்பர்களே, சுசி மிகவும் சுவாரஸ்யமான கேரக்டர் என்று முன்பே உங்களுக்கு தெரியப்படுத்தி இருந்தேன் அல்லவா! அவரைப்பற்றி மேலும் சில விடயங்கள்.

அவர் வெள்ளி மாநிலத்தில் ஒரு பிரபலமான தோட்டத்தில், நமது நாடு சுதந்திரமடைந்ததே அந்த வருடம் பிறந்த சுதந்திர வருடக் குழந்தை! அவரது தந்தையை எட்டு வயதில் இழந்து தாயின் அரவணைப்பில் வளர்ந்தவர், பள்ளிப்படிப்பு வேப்பங்காயாய் கசக்க, பள்ளி செல்ல வேண்டிய அவரின் காலைப்பொழுதுகள் வயிற்று வலி நடிப்பில் கரைந்துபோக, தாய் அடித்ததிலும், மிரட்டியதிலும் சில நாட்கள் பள்ளி வாசலை மிதித்ததில் ஓரளவு தமிழறிவு வாய்க்கப்பெற்று, பின்னாட்களில் தமிழ் நாளிதழ்கள், நாவல்கள் வாசிப்பது என தனது படிப்பறிவை சற்றே வளர்த்துக்கொன்டார்.


சிறுவயது முதற்கொன்டே அவருக்கு முருகக்கடவுள் மீது ஆழ்ந்த பற்று! தன் வீட்டை விட்டு உறவினர்கள் வீடு சென்றால் கூட‌ தான் மிகவும் நேசித்து வணங்கும் அந்த முருகக்கடவுளின் படத்தையும் கையோடு எடுத்துச் செல்லும் அளவு அவர் பக்தி முற்றியிருந்தது என்றால் பாருங்களேன்!

அவர் இளமைக்கால வாழ்க்கையை நோக்குகையில் ஏற‌க்குறைய நம்ம "தெய்வவாக்கு" ரேவதியைப்போலவே அமைந்தது அவர் கதை! சுசியும் அவருடைய இள‌வயதில் அருள்வாக்கு கூறும் ஒரு பெண்ணாக திகழ்ந்தவர் என்பதை அவரை அறிந்த பலரும் அறிந்த விடயம். இன்றும் பல திருவிழாக்களிலும் பலர் சாமியாடி அருள்வாக்கு சொல்வதை நம்மில் அநேகம் பேர் எதிர்கொன்டிருக்கக்கூடும். பக்திப் பரவச நிலையில் அனைத்தும் அறிந்த ஆழ்மனது சொல்லும் ரகசியங்களா அல்லது உண்மையிலேயே வேறேதும் சூட்சுமங்கள் உள்ளதா என அறிய முடியா அரிய நிலையில் சுசியும் பல நேர்த்திக்கடன்கள், அதன்வழி அருள்(மருள் என்றும் சொல்கிறார்களே !???) ஏற்பட்டு பக்தி பரவசத்தில் மூழ்கலானார்! அந்த காலக்கட்டத்தில் மக்கள் இன்றைய நிலைபோல் கல்வியறிவு கொன்டவர்கள் அல்லவே! ஆனால் இன்றும் பலர் தைப்பூசங்களில் அருள் வந்தவர்களிடம் ஆசியும் அருள்வாக்கும் வாங்குகிறார்கள் அல்லவா, அது அவரவர் நம்பிக்கை ! எனவே பாட்டாளிகளாக மலாயாக்காடுகளில் தஞ்சம் புகுந்த நமது முன்னோர்களின் அப்போதைய வாழ்க்கையினையும் இதுபோன்ற விடயங்கள் எளிதாக ஆட்கொள்ள ஏதுவான நிலை .வாய்த்திருந்தது சரி ந‌மது கதைக்கு வருவோம்


அவரும் ஒரு சாமியாடியாக தனது இளமைப்பருவத்தை அங்கே கழித்து வந்தார், பலருக்கு குறி சொல்வது, சாமியாடுவது என்றாகிப்போனது சுசியின் வாழ்வு, எனினும் அந்த சாமியாடி வாழ்க்கை அதிக நாள் நீடிக்கவில்லை! அவர் சகோதரனின் நண்பர் ஒருவருக்கு அவர்மேல் ஆசை பிறந்தது, பின்னே செதுக்கிய சிலையாட்டம், தங்க நிறத்தில், காதலிக்க நேரமில்லை படத்தில் நடித்த காஞ்சனா அம்மாவை ஞாபகப்படுத்தும் அவர் அழகு யாரைத்தான் வசியம் செய்யாது! அந்த வாலிபர் கருமை நிறத்தோடும் களையான தோற்றத்தோடும், நல்ல சாரிரமும் வாய்க்கப் பெற்றவர் என்பதால், சந்தடி சாக்கில் கூட்டமாய் சுசி வீட்டு வராந்தாவில் அமர்ந்துகொன்டு பல இனிமையான டி.எம்.எஸ் அவர்களின் பாடல்கள் வாயிலாக தன் அன்பை அவர் தூது விடுக்க, "ஏன்டா இந்த ஆளை வீட்டுக்கு கூட்டியாந்தே? சீ, ஆளையும் மூஞ்சியும் பாரு, அடுப்பங்கரையிலே அரைகுறையாய் தீய்ந்த கொள்ளிக்கட்டையாட்டம்" என அவரை வீட்டுக்கு அழைத்துவரும் தனது தம்பியிடம் மல்லுக்கு நிற்பார் சுசி! எனினும் காலமாற்றத்தில் விதி தன் வேலையைச்செய்ய தனது குடும்பத்தினரை பகைத்துக்கொன்டு தனை விரும்பிய அவரையே கரம்பிடித்து மூன்று குழந்தைகளும் தாயானார் சுசி! ஓரளவிற்கு தலையெடுத்திருந்த அவரது குடும்பம் அவரை ஒதுக்கிவைத்தது, இனிமையாக பாட மட்டுமே அறிந்துவைத்திருந்த அவர் கணவர் பொருளீட்டிக் குடும்பம் நடத்தும் ஆற்றல் குறைந்தவராயிருக்க, அலையில் மிதக்கும் பந்தாக வாழ்க்கை அவர்களை அலைக்கழிக்க இறுதியில் அந்தக் குடிசை வீட்டில் குடியேரும் நிலையை அடைந்தனர்...


அவ்வழியாக தனது தெய்வ வழிபாட்டின் நம்பிக்கையாலும், இறைவன் எனும் ஒரு மாபெரும் சக்தி தனை சூழ்ந்து தற்காக்கிறது எனும் மன உறுதியோடும் சுசி எனும் ஒரு ச‌ராசரி பெண்மணி பலரும் சர்வ சாதார‌ணமாக‌ இல்லையென்று வாதிடும், ஒரு சிலரே, ஆமாம் அமானுக்ஷ்யங்கள் அவதரிப்பது உண்மைதான் என ஆராய்ச்சி மனப்பான்மையோடு ஏற்றுக்கொள்ளும் ஒரு நிழல் யுத்தத்தை நேரிடையாக எதிர்கொள்ளத் தயாராகிறார், இனி அவர் எதிர்பாராமல் எதிர்கொன்ட பிரச்சனைகளோடு தொடரும் மர்மங்கள் அடுத்த பாகங்களாக...


8 comments:

ஒற்றன் said...

அருமையான மொழிநடையில் அமைந்துள்ளது உங்களுடைய தொடர்..

மேலும் பல மர்மங்களின் முடிச்சுகளை விரைவில் அவிழ்க்கவும்..

குறை ஒன்றும் இல்லை !!! said...

நல்லா விருவிருப்பா இருக்குங்க...

tamilvanan said...

மேலும் தகவல்கள்
இங்கே
கிளிக் செய்ததுதான்... சூப்பர் தமி்ழச்சி......
அந்த பதிவை சொன்னேன்பா...

//தான் மிகவும் நேசித்து வணங்கும் அந்த முருகக்கடவுளின் படத்தையும் கையோடு எடுத்துச் செல்லும் அளவு அவர் பக்தி முற்றியிருந்தது //

தமி்ழ்க் கடவுள் முருகா .... இந்த தொடர மெகா தொடரா இழு இழுன்னு இழுக்கிற சிவனேசு கிட்டேந்து தமி்ழ் வாசகர்களை காப்பாத்து முருகா.... காப்பாத்து..

ஆமாம் சுசி எதிர்பாராமல் எதிர்கொன்ட பிரச்சனைதான் என்ன? ஆத்மா 6ல சீக்கிரம் போடும்மா

கே.பாலமுருகன் said...

http://bala-balamurugan.blogspot.com/2009/08/blog-post_13.html

சில அமானுட குரல்களும் என் வீட்டிற்கு வராத பிள்ளை பேயும்

சிவனேசு said...

ஒற்றன்

வரவேண்டும் ஒற்றரே வணக்கங்கள்,

கொன்டு வந்த வாழ்த்து செய்திக்கு நன்றி!

உண்மையை சொல்லிடுங்க !
"சீக்கிரமா முடித்துத்தொலை" என்பதைத்தானே இவ்ளோ நாசுக்கா சொல்றீங்க !!!?

சிவனேசு said...

குறை ஒன்றும் இல்லை !!!

நன்றி நண்பரே ! மேலும் பயமுறுத்த முயற்சி செய்கிறேன்!

சிவனேசு said...

tamilvanan

//தமி்ழ்க் கடவுள் முருகா .... இந்த தொடர மெகா தொடரா இழு இழுன்னு இழுக்கிற சிவனேசு கிட்டேந்து தமி்ழ் வாசகர்களை காப்பாத்து முருகா.... காப்பாத்து..//

ம்ஹூம், அதுக்கு சான்சே கிடையாது தல! இந்த கக்ஷ்டத்தை அனுபவிச்சுத்தான் ஆகனும்! இது அந்த ஆறுபடையான் கட்டளை!

சிவனேசு said...

கே.பாலமுருகன்

சிறு வயதுக்கேயுரிய பயங்களை அழகியலோடு வெளிப்படுத்தியிருக்கிறீர்கள், நன்றாக அமைந்துள்ளது தங்கள் படைப்பு! வாழ்த்துக்கள் !