.

.
.

Saturday, May 23, 2015

முல்லை - 7

ம‌னிதன் நினைப்பதுண்டு 
வாழ்வு நிலைக்கும் என்று
கடவுள் நினைப்பதுண்டு 

பாவம் மனிதன் என்று ‍
                               கவியரசு கண்ணதாசன்



கடந்து போகும் காலம், கரைத்துக் கொன்டு போகும் வாழ்வை !  பிறந்தது முதல் இறப்பை தேடி நகர்ந்து கொன்டிருக்கும் வாழ்க்கையில், ஆதியில் தொடர்ந்த இரத்த பந்தங்களோடும், இடையில் தாமாக ஏற்படுத்திக் கொன்ட சொந்தங்களோடும் அலைகடல் ஓடமாய் அல்லாடுகிறது வாழ்க்கை.

கண்ணம்மா கணவனைப் பிரிந்து, சுயமாய் சம்பாதித்து நல்ல முறையில் மகனை வளர்த்தெடுக்கப் பகீரதப் பிரயத்தனம் செய்துகொன்டிருந்தார். அவர் மகன் சங்கர் வள‌ர்ந்தான், ஆனால் அவன் தாய் நினைத்தபடி அல்ல!