.

.
.

Tuesday, July 28, 2009

இப்படியுமா ‌பரவும் எயிட்ஸ் நோய்?அன்பர்களே(நட்பெனும் கடல் மூழ்கி நான் கண்டெடுத்த நல் முத்துக்கள்)! நண்பர்களே ( நான் அறியாத, தெரியாத, பார்க்காத, பழகாத நபர்கள் ஆயினும் எனை மதித்து இங்கே எட்டிப்பார்த்திருக்கும் நல்ல உள்ளங்கள்)

இந்தப் பொன்னான மாலைப் பொழுதினிலே, கடலலையெனத் திரண்டிருக்கும் வாசகப் பெருமக்களாகிய உங்கள் அனைவருக்கும் தெரிவித்துக்கொள்வது என்னவென்றால் ( இதெல்லாம் ரொம்பவே ஓவர்! உடனடியா விக்ஷயத்திற்கு வரலைன்னா இப்போதே வெளிநடப்புச் செய்துவிடுவோம்னு ஏகப்பட்ட குரல்கள்!) சரி சரி நேரடியாக விக்ஷயத்திற்கு வந்து விடுகிறேன்!
இதற்கு முன் அடியேன் எழுதிவந்த பேய்க்கதையைப் படித்து பயத்தால் நடுந‌டுங்கி வீட்டை விட்டு வெளியே போகவும் பலர் பயப்படுவதாக தகவல் வந்து குவிந்த வண்ணம் உள்ளது! ஆகையால் எங்கே நாமெழுதும் இந்தப் பேய்க்கதையால் பலபேர் பயத்தில் வேலைக்கே போகாமல் இருந்து அதனால் நாட்டின் பொருளாதரத்திற்கு பங்கம் வந்துவிடக்கூடாதே எனும் நல்லெண்ணத்தில் தற்காலிகமாக கதை நிறுத்தப்பட்டு, ( அடக்கடவுளே இது அண்டப்புளுகு, ஆகாசப் புளுகு எல்லாத்தையும் தாண்டிய பிரபஞ்சப் புளுகா இருக்குதேடா சாமி!)

கதைகளை ஓய்வான மேலும் பல சமயங்களில் பரிமாறிக்கொள்வோம், அதையும் தாண்டிய ஒரு முக்கியமான செய்தியை இப்பொழுது கவனிக்கலாம் வாருங்கள் :‍

எயிட்ஸ் எனும் உயிர்க்கொல்லி நோயின் விபரீதம் உலகறிந்த விக்ஷயம்! தவறான ஆண் பெண் உறவு, போதை ஊசிகளின் பறிமாற்றம்,புண்கள். காயங்கள் வழி எயிட்ஸ் கிருமியால் மாசடைந்த இரத்தத்தின் சேர்க்கையும் எயிட்ஸ் பரவ வழி வகுக்கிறது யாவரும் அறிந்த ஒரு செய்தியே ஆனால் நாம் நினைத்தும் பாராத மேலும் பல விதங்களில் எயிட்ஸ் நோயால் மாசடைந்த இரத்த சேர்க்கை நிகழ்வது அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

பெரும்பாலான ஜனரஞ்சகமான வீதியோரங்களில் பல ஆங்காடிக்கடைகளில் பலதரப்பட்ட உண்வு வகைகளை விற்பனை செய்வதை நாம் அனைவரும் அறிவோம். வெயில் சுட்டெரிக்கும் வேளைகளில் நாவரண்டு போகும். அப்பொழுது அழகழகாய் கண்ணாடிப்பெட்டிகளில் ஐஸ்கட்டிகளின் கூட்டங்களுக்கு மத்தியில் அன்னாசிப் பழத்துண்டுகள், பப்பாளித்துண்டுகள், குமுட்டிபழத்துண்டங்கள், மேலும் பலவகைப் பழங்கள் நம்மை கண்சிமிட்டி அழைத்து வாங்கி உண்ணத்தூண்டுவது போல் இருக்கும்! நாமும் ( முழுப்பழங்களை வாங்கி, சுத்தப்படுத்தி, பதப்படுத்தி உண்பதைவிட, இம்மாதிரி எல்லாமே த‌யாராய் அமைந்திருப்பது தானே நமக்கும் அதிகம் பிடிக்கும்! வேலை மிச்சம், நேரம் மிச்சம்! இப்படி பல வியாக்கியானம் வேறு!)
பல‌ சமயங்களில் எதையும் யோசிக்காது பண‌ம் கொடுத்து இது போல் பதப்படுத்தப்பட்ட பழ வகைகளை வாங்கி உண்கிறோம் அல்லவா! அது மிகவும் தவறு என்பது இந்தச் செய்தியைப்படிக்கும்ப்போது நமக்குப்புரிகிறது.
அந்த‌ச் சிறுவனுக்கு சுமார் 10 வயதிருக்கும், அவன் ஒரு வீதியோர அங்காடியில் வெட்டி விற்கப்பட்ட அன்னாசிப்பழத்துண்டங்களை வாங்கி உண்டிருக்கிறான், அதன் பின்னர் சில‌காலங்களில் அவனுக்கு சுக‌வீனம் ஏற்படத்துவங்கி சுமார் 15 நாட்கள் கழிந்த நிலையில் அவன் முழுமையான சுகாதாரப்பரிசோதனைக்கு ஆட்படுத்தப்பட்ட போது அவனுக்கு எயிட்ஸ் நோய் கண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது! அதிர்ச்சியில் உறைந்த அவன் குடும்பம் மொத்தமும் மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ள யாருக்குமே அந்த நோய் பீடிக்கப்படவில்லை எனக் கண்டுபிடிக்கப்பட்டது.
சிறுவனின் நோய் எப்படித்துவங்கியது எனும் ஆராய்ச்சித்தொடரில் நோயில் விழ சில காலங்களுக்கு முன் அவன் அன்னாசிப்பழத் துண்டங்கள் வாங்கி உண்டானே அந்தப்பழக்கடை அங்காடியும் பரிசோதனைக்கு ஆட்படுத்தப்பட்ட போது, அந்த பழக்கடை வியாபாரிக்கு கையில் வெடிப்புக்களுடன் கூடிய சிறு சிறு இரத்தப்புண்கள் அடையாளம் காண்பட்டுள்ளன. சந்தேகத்தின் பேரில் அவரை மருத்துவப் பரிசோதனைக்கு ஆட்படுத்திப் பரிசோதிததில் அவர் பல காலமாக எயிட்ஸ் நோயின் ஆளுமையில் சிக்கிச் சீரழிந்து வந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது! பாவம் அந்தச் சிறுவன் இந்த அங்காடிக்கடை வியாபாரியினால் அவனுக்கும் இந்த நோய் பரவி இன்று அவனும் ஒரு எயிட்ஸ் நோயாளியாக மாறி வாழ்நாட்களை எண்ணிக்கொன்டிருக்கிறான்.
நண்பர்களே பார்த்தீர்களா! விதியின் வடிவம் யார் கண்ணுக்கும் புரிவதில்லை , உண்மைதான் ஆனால் சிறிது எச்சரிக்கையாக இருப்பதன் வழி இது போன்ற பல அசம்பாவிதங்களை நிச்சயம் தவிர்க்கலாம் அல்லவா!
எனவே தயவு செய்து வீதிகளில் வெட்டி விற்கப்படும் இதுபோன்ற பழத்துண்டங்கள் மட்டுமல்ல, வெறும் கைகளோடு படைக்கப்படும் எல்லா வகை உண்வுகளையும் முடிந்தவரை தவிர்த்துவிடுங்கள், நெகிழியிலான கயுறைகள் அணிந்து உண‌வுகளைப் பறிமாறும் கடைகளுக்கு முன்னுரிமை வழங்குங்கள். நமது பாதுகாப்பும், நமது ஆரோக்கியமும், நமது கைவசவமே!
சரி, நண்பர்களே, மீண்டும் சந்திப்போம்!

10 comments:

குறை ஒன்றும் இல்லை !!! said...

ஆஹா பயத்த கிளப்பீட்டங்களே ..... இனி ரோடு ல ஒரு பையன் எதையும் வாங்கி சாப்பிட மாட்டான் !!! இதான் வீட்டிலேயே சாப்பிட்டா எந்த பிரச்சினையும் இருக்காதுங்கறது !!!

tamilvanan said...

நல்ல பகிர்வு.

உங்கள் ஆவிக்கதையை விட இது அதிகமாக பயமுறுத்துகிறதே.

அது சரி... எந்த கையுறை கம்பெனிகாரன் அமொவுன்ட் கொடுத்தான்.

குறை ஒன்றும் இல்லை !!! said...

எங்கிருந்தாலும் உடனடியாக இந்த பக்கத்திற்கு வரும் படி அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்.. மீறினால் ஜக்கம்மாவின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்....
http://yellorumyellamum.blogspot.com/2009/07/blog-post_28.html

சுபா said...

அடக்கடவுளே..இப்படியுமா..?
பல நல்ல தகவல்களைத் தருகிறீர்கள்.

சிவனேசு said...

குறை ஒன்றும் இல்லை !!!

//இதான் வீட்டிலேயே சாப்பிட்டா எந்த பிரச்சினையும் இருக்காதுங்கறது !!!//

சிவனேசு : நல்ல முடிவு நண்பா! அங்காடிகளில் வாங்கினாலும் அவை முழுமையாக இருக்கும் பட்சத்தில் கூடுதல் நன்மை!

மனசாட்சி : வீட்டிலே சரியா சாப்பிடுரதில்லைன்னு இவரோட வீட்ட‌ம்மா(திருமணமயிருந்தால் வீட்டம்மா இல்லையென்றால் பெற்ற அம்மா) தான் அமொளன்ட்டு கொடுத்து இத எழுதச்சொன்னாங்கன்ற உண்மையை சொல்லவே கூடாதுப்பா!

சிவனேசு said...

tamilvanan,

தல, அக்கரையா விசாரிக்கிறதைப்பார்த்தா, இதிலேயும் பங்கு கேட்பாரோ! (அடக்கி வாசி சிவனேசு! அடக்கி வாசி)

சிவனேசு said...

குறை ஒன்றும் இல்லை !!!

//எங்கிருந்தாலும் உடனடியாக இந்த பக்கத்திற்கு வரும் படி அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்.. மீறினால் ஜக்கம்மாவின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்....//

தோ, ஒரே ஓட்டமாய் ஒடியாந்திடறேன் சாமி! ஆத்திரப்பட்டு அவசரப்பட்டு, ஆத்தாகிட்ட போட்டு குடுத்திடாதீங்கைய்யா!

சிவனேசு said...

சுபா

ஆமாம் தோழி, பல சமயங்களில் நமது அலட்சியங்கள் எப்படி உயிருக்கே உலை வைத்து விடுகிறது பாருங்கள்!

கிருஷ்ணா said...

ஐயோடா!! இது என்ன இவ்ளோ பெரிய குண்டு! சொந்தமாக சமைத்து சாப்பிடும் பழக்கமே இல்லையே! இரண்டு மணி நேரம் செலவு செய்து சமைத்துவிட்டு.. பதினைந்து நிமிடங்கள் சாப்பிடுவோம்.. பிறகு, இன்னும் அரை மணி நேரம் பாத்திரங்களை எல்லாம் கழுவி எடுக்க.. அப்பப்பா.. எவ்ளோ டென்ஷன்?! பேசாமல் உணவகத்துக்குச் சென்றால், பத்து நிமிடங்களில் சுடச் சுட உணவு.. அதன் பிறகு ஒரு மணி நேரம் அளவளாவி விட்டு வந்தால்.. அதுதானே அலுவலில் பெறும் டென்ஷனுக்கு மருந்து! இவ்ளோ காலம் இப்படியே காலத்தை ஓட்டியாச்சு.. இப்ப போயி வீட்டில சமைச்சு சாப்பிடனும்னா.. ஐயோ சாமி!!! நான் மாட்டேன்.. இதுல ஒரு ஓரவஞ்சனை என்னான்னா.. எல்லா வேலைகளையும் பெண்கள் செய்ய, ஆண்கள் சாப்பிட்டு விட்டு தூங்கறாங்க.. இது எந்த விதத்துல ஞாயம்!

சிவனேசு said...

//இதுல ஒரு ஓரவஞ்சனை என்னான்னா.. எல்லா வேலைகளையும் பெண்கள் செய்ய, ஆண்கள் சாப்பிட்டு விட்டு தூங்கறாங்க.. இது எந்த விதத்துல ஞாயம்!//

அசத்திட்டீங்க நண்பரே!