
காலங்களே தருகின்றன, அவையே பறிக்கின்றன, காலங்களே சிரிக்கச் செய்கின்றன, அவையே அழவும் வைக்கின்றன, காலம் பார்த்துக்காரியம் செய்தால்,பூமியையே விலைக்கு வாங்கலாம், காலங்களிலேயே காரியங்களின், வெற்றி தோல்விகள் அடங்கி இருக்கின்றன!

ஆறு என்ற ஒன்று, ஆண்டவனால் படைக்கப்படவில்லை!அது ஆறாக உருக்கொன்டு, இரண்டு கரைகளையும் ஏற்படுத்திக்கொன்டது,மனிதருக்கு இல்லாத புத்தி, தண்ணீருக்கு இருக்கிறது!

கோடை வரலாம், வசந்தம் வரலாம், பனிக்காலங்கள் வரலாம் பருவங்கள் மாறுமே தவிர, உலகத்தினுடைய உருவம் மாறினாலும் கூட, உன்னுடைய நிலை மாறாது, மனதை மட்டும் உன்னால் அடக்க முடியுமானால்.
2 comments:
கீதையில் சொல்வதைப் போல் மாற்றம் ஒன்று தான் மாற்றம் இல்லாதது இக்கட்டுரையின் சிந்தனை அமைந்துள்ளது... காலத்தால் எல்லாமுமே மாற்றம் காணக் கூடியதே...
உண்மைதான் விக்னேக்ஷ்வரன், தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக மிக நன்றி, அடிக்கடி வருக, தங்கள் கருத்தினை தருக.
Post a Comment