
நல்லது நண்பர்களே! இரண்டு முக்கியமான நற்செய்திகளை தாங்கி மலர்ந்துள்ளது இன்றைய தமிழ்ப்பூங்கா! முன்பதாக ஒரு இனிமையான நற்செய்தி, அதோ அந்தப் பதிவு ஓரத்திலே இந்தப் பதிவர் எனது சிறந்த நண்பர் பதிவுக்கு கீழே ஒரு குட்டி தேவதை மலர்களுக்கு மத்தியில் அன்பை சுமந்து அழகாக மலர்ந்திருப்பது அறிய முடிகிறதா ?
இந்த விருதை குறையே சொல்ல முடியாது நண்பர்களே , காரணம் தெரியுமா ? இது குறை ஒன்றும் இல்லை எனும் குறை ஒன்றும் இல்லை பதிவர் அவர்களால் நமக்கு குறை ஒன்றும் இல்லாமல் அளிக்கப்பட்ட குறை ஒன்றும் இல்லாத விருது (ரொம்ப குழப்பிட்டமோ!) நன்றி நண்பரே!
சுடர் விளக்காயினும் (நினைப்புத்தான் நமக்கு! ) தூண்டுகோல் ஒன்று அவசியமல்லவா ? அவ்வகையில் இப்பதிவுலக பாதையில் நம்மையும் ஒரு பொருட்டாய் ஏற்று நமது நட்பையும் மதித்து நட்பு வடிவிலும் , பின்னூட்டங்களின் வடிவிலும் ஆதரவளித்த அன்புள்ளங்களுக்கு இந்த விருதை அன்போடு அர்ப்பணிப்பதில் பெருமகிழ்வும் பேருவகையும் அடைகிறோம், பெறுபவர்களும் மழலை மனதோடு மகிழ்ந்து ஏற்றுகொள்வார்கள் எனும் பெரும் நம்பிக்கையோடு...
பதிவுலகில் எமக்கு ஆசிகள் தந்து, ஆதரவுகள் ஈந்து , வாழ்த்துக்கள் அளித்து, நட்பைப் புலப்படுத்தி, பின்னூட்டங்கள் வாயிலாக தமது ஆதரவுகளை வாரி வழங்கிய எனது வழிகாட்டி அய்யா அவர்களுக்கும் எனது பல நல்ல நண்பர்களில் மிகச்சிறந்த சில நண்பர்களுக்கும் நான் அளிக்கும் எனது நன்றி சமர்ப்பண விருது...
இந்த விருதை யார் சிபாரிசையும் ஏற்காமலும்( கேக்ஷ் கொடுக்காததால்
:( ! விருது பெற்ற அன்பர்களின் அனுமதியும் கோர இயலவில்லை (ஆட்சேபிக்க மாட்டார்கள் எனும் மகா நம்பிக்கையோடு! ) அன்போடு சமர்ப்பிகின்றேன் ஏற்றுக்கொள்ளுங்கள்....
1.அடியேனின் பதிவுலக வாழ்க்கைக்கு பாதை அமைத்துத்தந்த அய்யா மலாக்கா முத்துக்கிருக்ஷ்ணர் அவர்கள், ஒரு விருதுக்கு விருது வழங்குவதில் தமிழ்ப்பூங்கா பெரிதும் பெருமையடைகிறது !
2.பதிவுகளின் ஆரம்பம் முதல் இன்றுவரை தனது வற்றாத ஆதரவை பின்னூட்டக்கருத்துகளாக தந்து ஊக்கமளிக்கும் சிறந்த பதிவர்/நண்பர் ஓலைச்சுவடி சதீசு குமார் அவர்கள். நண்பரின் வலைப்பூங்கா குடும்பத்தில் நமக்கும் ஒரு வாய்ப்பளித்து நம்மை ஊக்கப்படுத்திய நண்பருக்கு இவ்வேளையில் நமது நன்றிகள் உரித்தாகுக!
3.நட்புக்கு மதிப்பளித்து இந்த விருதை நமக்குத்தந்து நமது ஆதரவுக்கு ஆதரவு தந்த விருது வள்ளல் குறை ஒன்றும் இல்லை அவர்கள் (அப்புறம் போஸ், அமெளன்ட்ட கேக்ஷா இல்லே செக்கா ன்னு சொல்லவேயில்ல? :)
4. அடுத்ததாக வருவது நம்ம பின்னூட்டப் புயல் தல தமிழ்வானன் அவர்கள்!, இவர் பின்னூட்டங்களே பதிவைப்போல(அதிகமான எழுத்துக்கள் மட்டுல்ல, அதிலுள்ள அர்த்தம் பொதிந்த கருத்துக்களும் சேர்த்து!) அமைந்துவிடுவது அனைவரும் அறிந்ததே. இவர் பின்னூட்டம் பார்த்தாலே அடியேனுக்கு திருவிளையாடல் நக்கீரர் ஞாபத்துக்கு வருகிறார் :( ! சிவனாக நாம் மாறலாம் என்று பார்த்தால் மனுக்ஷன் தருமியாக அல்லவா நம்மை மாற்றப்பார்க்கிறார் :( !!!!!
6.கவியே உருவாய் , உருவே கவியாய் கவிபாடும் கவிக்குயில் தோழி புனிதா !
7. என் உயிரை வாங்கும் உயிருக்கு உயிரான ரஞ்சீதாஸ் கோர்ணர் ரஞ்சீதா! (ஹிஹிஹி)
8.தமது வலைப்பதிவில் தமிழ்ப்பூங்காவை இணைத்து பலருக்கும் எட்டச் செய்த நல்ல நண்பர் வாழ்க்கைப்பயணம் விக்கினேசு அவர்கள்.
9.பதிவின் ஆரம்ப காலங்களில் மிகவும் ஊக்கமளித்துப் பாராட்டிய நண்பர் கவித்தமிழ் கிருக்ஷ்னா அவர்கள்! இவ்வேளை தமது சகோதரியின் கணவரின் மறைவால் துயறுற்றிருக்கும் நண்பருக்கும் அவர்தம் குடும்பத்தார்க்கும் நமது ஆழ்ந்த அனுதாபங்களை சமர்ப்பிகின்றோம், இறைவனடி எய்திய ஆத்மா சாந்தியடையவும், நண்பர் இந்த சோகத்திலிருந்து மீளவும் இறையருளை பிரார்த்திக்கின்றோம்
10.வாழ்த்துவதற்கும், பாராட்டுவதற்கும் பரந்த மனப்பான்மை தேவை! அவ்வகையில் அற்புதமான வார்த்தைகளால் நம்மை பாராட்டி ஊக்கமளிக்கும் பதிவர்/நண்பர் மனோவியம் மனோகரன் கிருக்ஷ்னன் அவர்கள்!
நல்லது நண்பர்களே, இந்த விருது விழாவையும் மிகப்பெரிய விழாவாக கொன்டாடும் பேராசைதான்! என்ன செய்வது! விக்ஷமெனப் பரவும் பன்றிக்காய்ச்சலோடு மக்கள் மன்றாடிக்கொன்டிருக்கும் இவ்வேளையில், விழாவுக்கு யார் வருவார்கள்? வந்தாலும் முகமூடி போட்டு வந்தால் யாரை எப்படி அடையாளம் காண்பது போன்ற மிகப்பெரிய விக்ஷயங்களை கூட்டிக்கழித்து, பெருக்கிவகுத்துப் பார்த்ததில், சிம்பளாக இப்படியே முடித்துவிடுவதுதான் சாலச்சிறந்தது எனும் சீரிய எண்ணத்தில் நமது இரண்டாவது விருது விழா இவ்வளவில் ஒரு நிறைவை எய்துகிறது!
அடுத்ததாக முக்கியமான சங்கதி ஒன்று உங்களுக்காக,
நண்பர்களே , நம்மில் சிலருக்கு இதுபோன்ற விருது விக்ஷயங்களில் அவ்வளவாக ஈடுபாடுகள் இருப்பதில்லை! "என்னாது சின்னப்புள்ளத் தனமாயில்லே இருக்கு"ன்னு நினைக்கிறோம், ஆனால் ஒவ்வொரு மனிதருள்ளும் ஒரு தேவதையும், ஒரு மிருகமும் வாசம் செய்வதைப்போல் ஒரு மழலையும் வாசம் செய்கிறது! அதற்கு ஏன் நாம் மதிப்பளிக்கக்கூடாது ?
பல சமயங்களில் நாம் நமது மழலைத்தன்மையை நமது மனதுள்ளேயே மறைத்து விடுகின்றோம்! அன்புக்காகவும், ஆதரவுக்காகவும், அங்கீகாரத்துக்ககவும் பல சமயங்களில் ஒவ்வொருவருள்ளும் ஏங்கும் இந்த மழலை மனம்! வெளிப்படுத்தினால் நமது மதிப்புக்கு பங்கம் விளையுமோ என அச்சமுறுவது நமது குணம்! எங்கே நீங்கள் ஒரு மிகச்சிறந்த ஊக்குவிப்பவர்கள் ( ஊக்கு விப்பவர்கள் என பிரித்து அர்த்தப்படுத்திக்கொள்ளக்கூடாது!) என நான் அங்கீகாரம் அளிக்கிறேன், "ஹையா ஜாலி, தேங்சு சிவனேசு" என மழலை மனதோடு அதை உங்கள் பதிவுகளில் பதிக்கும் தங்களின் மழலை மனதுக்கு தாங்கள் மதிப்பளிக்கின்றீர்களா ! பதிலை தங்கள் வலைப்பதிவுகள் சொல்லட்டுமே !
பல சமயங்களில் நாம் நமது மழலைத்தன்மையை நமது மனதுள்ளேயே மறைத்து விடுகின்றோம்! அன்புக்காகவும், ஆதரவுக்காகவும், அங்கீகாரத்துக்ககவும் பல சமயங்களில் ஒவ்வொருவருள்ளும் ஏங்கும் இந்த மழலை மனம்! வெளிப்படுத்தினால் நமது மதிப்புக்கு பங்கம் விளையுமோ என அச்சமுறுவது நமது குணம்! எங்கே நீங்கள் ஒரு மிகச்சிறந்த ஊக்குவிப்பவர்கள் ( ஊக்கு விப்பவர்கள் என பிரித்து அர்த்தப்படுத்திக்கொள்ளக்கூடாது!) என நான் அங்கீகாரம் அளிக்கிறேன், "ஹையா ஜாலி, தேங்சு சிவனேசு" என மழலை மனதோடு அதை உங்கள் பதிவுகளில் பதிக்கும் தங்களின் மழலை மனதுக்கு தாங்கள் மதிப்பளிக்கின்றீர்களா ! பதிலை தங்கள் வலைப்பதிவுகள் சொல்லட்டுமே !
சரி ஒரு நற்செய்தி முடிந்துவிட்டது, அந்த இரண்டாவது நற்செய்தி ? என கேட்பவர்களுக்கு, இன்று நமது இந்த விருது விழாவை முன்னிட்டு, மர்மமேடைப்பதிவு கேன்சல் ஆகிவிட்டது என்பதை வருத்ததோடு தெரிவித்துக்கொள்கிறேன், மகிழ்ச்சி தானே :( ?
சரி மீண்டும் அடுத்த பதிவில் நமது மர்மமேடையின் ஏனைய பகுதியை படைக்க வருகிறேன், அப்ப நான் இப்போ உத்தரவு வாங்கிக்கிறேன் நண்பர்களே!

14 comments:
நன்றி.. வாழ்த்துக்கள்!!
அப்பாடா மர்மக்கதை இல்லையா இன்னிக்கு??
//கவித்தமிழ் கிருக்ஷ்னா அவர்கள்! இவ்வேளை தமது சகோதரியின் கணவரின் மறைவால் துயறுற்றிருக்கும் நண்பருக்கும் அவர்தம் குடும்பத்தார்க்கும் நமது ஆழ்ந்த அனுதாபங்களை சமர்ப்பிகின்றோம்//
தகவலுக்கு நன்றி.ஆழ்ந்த அனுதாபங்களை சமர்ப்பிகின்றேன் கிருக்ஷ்னா.
உங்கள் நட்புக்கும் பாராட்டிற்க்கும் நன்றி.இந்த பதிவுக்காக நான் எனது சார்பாக ஊக்கு விப்பு தொகையை உங்களுக்கு தரலாம்னு இருக்கேன்.
sima@yahoo.com முகவரிக்கு இமெயில் செய்ய முடியவில்லை.
//இன்று நமது இந்த விருது விழாவை முன்னிட்டு, மர்மமேடைப்பதிவு கேன்சல் ஆகிவிட்டது என்பதை வருத்ததோடு தெரிவித்துக்கொள்கிறேன், மகிழ்ச்சி தானே//
"ஹையா ஜாலி, தேங்சு சிவனேசு" அப்பாட சொன்ன மாதிரியே முருகா என்னையும் என் மக்களையும் காப்பாத்திட்ட.
கையில மத்தாப்பூ அதுக்குள்ள தீபாவளி ஜாபகமோ!!!
நன்றி :-)
Thnx again :-)
நன்றி..
aaaaaaaaaaaaaahhhhhhhhhh! enaku nenjellam valikutey ,iruntalum virutu kudutatale maniciduren! :)
குறை ஒன்றும் இல்லை !!!
நன்றிக்கு நன்றி நண்பரே!
வாங்க தல! வணக்கம், என்னது ஊக்கு விப்பு தொகை எனக்கா? , "ஹையா ஜாலி, தேங்சு தமிழ்வாணன் சார்" அப்படியே அந்த "பின்" வாங்காத தொகை அதையும் ம்றந்துராதீங்க, சரியா ?
//"ஹையா ஜாலி, தேங்சு சிவனேசு"//
மர்மக்கதை கட்டானதில் உங்களுக்கு ஏற்பட்ட இந்த ஆழமான சோகம் எனக்குப் புரியுது தல!மனசத் தேத்திக்குங்க! :(
ஆஹா பின்னூட்டத்தில் நான் வாங்கும் பாட்டுக்கள் போதாது என்று அஞ்சல் வேறா ? சரி என்ன செய்வது! விதி யாரை விட்டது! sivanes1526@gmail.com இந்த அஞச்ல் முகவரிக்கு உங்கள் மொத்துகளை, சாரி செய்திகளை அனுப்பி வைத்து கலாய்க்கவும்
//கையில மத்தாப்பூ அதுக்குள்ள தீபாவளி ஜாபகமோ!!!//
உண்மையைச் சொல்லுங்கள்! நீங்கள் CID சங்கர்தானே, மாறுவேடத்தில் இங்கே வந்திருக்கீங்க ? இவ்ளோ கரெக்டா கண்டுபிடிச்சிட்டீங்களே! பாராட்டுக்கள்!
tamilvanan
VIKNESHWARAN
நன்றிக்கு நன்றி பாஸ் :)
புனிதா||Punitha said...
உங்களுக்கும் நன்றிம்மா...
சுபா said...
உங்களுக்கும் தேங்சுப்பா...
ranjitha said...
//aaaaaaaaaaaaaahhhhhhhhhh! enaku nenjellam valikutey ,iruntalum virutu kudutatale maniciduren//
விருதுன்னதும் நெஞ்சு வலி பறந்துடுத்தா மேடம் ? பரவால்லே, நீங்கள் ஒரு நல்ல அரசியல்வாதி ஆகலாம், வாய்ப்புக்கள் பிரகாசமாய் இருக்கிறது! ஹிஹிஹி
நன்றிங்க சிவனேசு....உங்களின் கனிவான கருத்துக்கு நன்றி .தங்களை போன்றோரின் ஊக்கமூட்டும் கருத்தாக்ங்களினால் நாங்கள் உள்ளம் மகிழ்கின்றேம்.தமிழ் கூறும் நல்லுலகம் உங்களை இருகரம் கூம்பி வரவேற்கிறது.....எவ்வழி நல்வழி அவ்வழி நம் வழி.....வாழ்க வளமுடன்.
manokarhan krishnan
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!
Post a Comment