
தண்ணீரில்லாமல் போவது நதியின் தவறல்ல,
காய்ந்து போவது காடு செய்த பிழையன்று,
கடலில் திமிங்கிலங்கள் இருப்பது கடலின் பிழையன்று,
ஒன்றுக்காக ஒன்றை கோபித்துக்கொண்டால்
நிம்மதியை இழப்பதுதான் மிஞ்சும்!
காய்ந்து போவது காடு செய்த பிழையன்று,
கடலில் திமிங்கிலங்கள் இருப்பது கடலின் பிழையன்று,
ஒன்றுக்காக ஒன்றை கோபித்துக்கொண்டால்
நிம்மதியை இழப்பதுதான் மிஞ்சும்!

எது நடக்கக்கூடாது என்பதற்காக நீ கோபப்படுகிறாயோ,
நீ கோபப்பட்டு நிதானமிழந்த ஒரே காரணத்திற்காக
அது நடந்தே விடுகிறது!
கோபம் முதற்கட்டத்தில் வென்றது போலத்தெரிந்தால்
நிரந்தரமாகத்தோல்வி அடையப்போகிறது என்று பொருள்!
எதையும் சாதிக்க விரும்புபவனுக்கு
நிதானம் தான் சிறந்த ஆயுதம்!
No comments:
Post a Comment