.

.
.

Sunday, June 14, 2009

கல்வியும் கடவுளும்


"இரை தேடு, இறையும் தேடு" என்பது சான்றோர் வாக்கு. அந்த முதல் "இரை"யை கெள‌ர‌வ‌மான‌ முறையில் தேட‌ க‌ல்வி என்ப‌து மிக‌ மிக‌ இன்ற்ய‌மையாத‌தாகிற‌து. ‌ இந்த நவநாகரீக கணிணி யுகத்தில், தொழில் என்றால் உடலுழைப்பை விட‌ அறிவுக்கும், திறமைக்குமே முன்னுரிமை அதிகம் வழங்கப்படுகின்றது. ஒரு மனிதன் நல்வாழ்வு வாழ, அவன் திறமைசாலி என்று ஆதாரத்தோடு நிரூபிக்க அவனுக்கு கல்வியறிவு சான்றிதழ் இன்றியமையாததாகிறது! படிக்காத மேதைகள் சிலர் பூமியில் வெற்றிக்கொடி நாட்டி இருப்பினும், புத்திசாலி எனும் பெருமை படித்தவர்களுக்கு வழங்கப்படுவது யாவ‌ரும் அறிந்ததே.


கல்வியில் சிறந்த சமுதாயம் பொருளாதாரத்திலும் வாழ்கைத்தரத்திலும் சிறப்பான முன்னேற்றத்தையே பதிவு செய்கிற‌‌து. அவ்வகையில் நாம் முன்னேற, நமது சந்ததியினர் எதிர்காலத்தில் மேன்மையான வாழ்க்கை நிலையை ஏற்படுத்திக்கொள்ள இன்றைய அடித்தளமாக அமைவது ஆரம்பக்கல்வியே. அப்படியெனில், அதை வழங்கக்கூடிய நமது கல்விக்கூடங்கள் நிச்சயம் தரமானதாகவும், சிறந்த அடிப்படை வசதிகளை கொன்டதாகவும் இருக்க வேண்டியது மிக மிக அவசியம் அல்லவா. ஆனால் அன்மையில் நான் கண்ணுற்ற கீழ்க்காணும் படங்களின் ஒப்பீடுகள், மனதை மிகவும் வெதனையடையச்செய்வதாக அமைந்துள்ளது. இதோ அவை உங்கள் பார்வைக்காக, இவை உண்மை இல்லை என்றால் தயவு செய்து மறுப்பு தெரிவியுங்கள்,

உலு செபெத்தாங், தைப்பிங்கில் அமைந்த ஐயனார் ஆலயம்
அதே தைப்பிங் மாவட்ட‌த்தில் அமைந்த வசதி குறைந்த கம்போங் லாமா ஜெபோங் லாமா ஆரம்பத்தமிழ்ப்பள்ளி!
போர்ட் கிளாங்கில் அமைந்த சிறீ பால சுப்ரமணியர் ஆலயம்அதே கிளாங்கில் அமைந்த தெப்பி சுங்கை ஆரம்பத்தமிழ் பள்ளியின் நிலை
சிரம்பானில் அமைந்துள்ள சிறீ பாலதண்டாயுதபாணி ஆலயம்
அதே நெகிரி செம்பிலானில் விளையாட்டு மைதானமோ, சிற்றுண்டிச்சாலையோ, அல்லது நூலகமோ இல்லாது கடை வரிசையில் அமையப்பெற்ற லுக்குட் சுங்கை சாலாக் தோட்ட ஆரம்பத்தமிழ் பள்ளி


எழில் மேவும் மாரான் ம‌ர‌த்தாண்ட‌வ‌ர் ஆல‌ய‌ம்அதே அளவு முக்கியத்துவம் வழங்கியதாகத்தெரியாத மாரான் மரத்தாண்டவர் ஆரம்பத்தமிழ் பள்ளி

அக வாழ்வுக்கு "இறை" முக்கியம் தான் ஆனால் இன்றைய வாழ்வில் இக வாழ்வுக்கு கல்வியே மிக மிக முக்கியம். எனவே நமது கவனத்தை தயவு செய்து நமது கல்விக்கூடங்கள் பக்கமும் செலுத்துவோம். இன்று நமது சமுதாயத்தில் புறையோடிப்போயிருக்கும் களங்கங்களை வேரோடு களைவதற்கு நமது முயற்சியை முன்வைப்போம், நமது சந்ததி நல்வாழ்வு வாழ வகைசெய்வோம்.4 comments:

மு.வேலன் said...

அருமை, அருமை. வாழ்த்துக்கள்!

tamilvanan said...

நம்மி்னம் கடவுளுக்கு செலவு செய்யும் தொகையில் ஒரு 25 சதவீதமாவது கல்விக்கு செலவு செய்தால் நிச்சயம் நாம் இந்த நாட்டில் முழுமையான கல்வி அறிவு பெற்ற முண்ணனி சமுதாயமாக இருப்போம்

சிவனேசு said...

தமிழ்வாணன்,

நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மையே, நம் மாண‌வர்கள் மிகவும் கூர்மையான அறிவு படைத்தவர்கள், நம் சமுதாயம் கல்விக்கு முன்னுரிமை அளித்தால் நிச்சயம் நம் நிலை உயரும். வருகைக்கு நன்றி, அடிக்கடி வருக, தங்கள் கருத்தினை தருக.

சிவனேசு said...

மு.வேலன்,

வாழ்த்துக்கு நன்றி.