.

.
.

Friday, June 19, 2009

யார்?
அங்கே, அவள் பால்ய சினேகிதி நிஷா! குறும்புத்தனமாய் சிரித்துக்கொன்டே அவள் பக்கத்தில் வந்து அமர்ந்து கொன்டாள், ஆச்சர்யத்தில் கண்கள் அகல, "ஏய் நீ எப்போ ஊர்லேர்ந்து இங்க வந்த? என மீனா கேட்க, நான் இன்னைக்கு காலைல தான் இங்க வந்தேன்" இது நிக்ஷா, சரி எங்க தங்கியிருக்க எனக்கேட்க "எங்கயும் தங்காம இன்னைக்கு சாயந்திரமா திரும்பவும் கிளம்பிருவேன், என்றாள் நிக்ஷா!
என்ன விக்ஷயம்? சுற்றிப்பார்க்க வந்தாயா? மீனா கேட்டாள், அதற்கு நிக்ஷா "எல்லாம் உன்னை பார்க்கத்தான் வந்தேன்! நீதான் ஏற்கனவே நீ தங்கியிருக்கும் வீட்டுக்கு எப்படி வரவேண்டும் என்று சொல்லித்தந்திருக்கிறாயே" என்றாள் கண்களால் சிரித்துக்கொன்டே
நிக்ஷா, மீனாவைப்போலவே ஒரு நடுத்தரக்குடும்பத்திலிருந்து வந்தவளே, மீனாவோடு ஆரம்பப்பள்ளியில் படித்து, பின்னர் கணிணி கற்றுக்கொன்டுசொந்த ஊரிலேயே ஒரு அலுவலகத்தில் வேலைக்குச் சேர்ந்தாள். நல்ல தோழி, அன்பானவள், நம்பிக்கையானவள், மீனா நிக்ஷாவை அவள் தங்கியிருக்கும் நாட்டிற்கு சுற்றிப்பார்க்க அடிக்கடி அழைப்பாள், அவளோ ஏதாவது ஒரு காரணம் சொல்லி தட்டிக்கழிப்பாள், இன்றோ எதிர்பாரா விதமாய் எதிரில் வந்து நிற்கிறாள்.
"ஏய் இன்னைக்கு என் அம்மா பிறந்த நாள், அர்ச்சனை செய்ய கோவிலுக்குப் போயிட்டிருக்கேன், கூட வரீயா", நிக்ஷா பேசவில்லை. மீனா இறங்கவேண்டிய நிறுத்தம் வந்ததும் கூடவே இறங்கிய நிக்ஷா, "நான் கோவிலுக்கு வரவில்லை, இங்கேயே காத்திருக்கேன், சீக்கிரம் போய் உன் பூஜையை முடித்துவிட்டு வா!" என்றாள், மீனாவுக்கு தோழியை தனியே விட்டுச்செல்வது சங்கடமாகத்தான் இருந்தது, அதிலும் ஊருக்குப் புதிது வேறு, என்ன செய்வது, வர மறுக்கிறாளே, மனதுள் கருவிக்கொன்டே கோவிலுக்குள் நுழைந்தாள்,
பிரார்த்தனை முடித்து வெளியே வந்து பார்த்தால் நிக்ஷாவை அங்கே காணவில்லை!
மீனாவுக்கு பகீரென்றது , அவள் தோழி நிக்ஷா! ஐயோ அவள் இந்த ஊருக்கு புதிதாச்சே, எங்கே போனாளோ, என்ன ஆனாளோ, மீனா அழுதேவிட்டாள்!
சட்டென்று, ஒரு யோசனை தோன்ற அவள் கைவசம் இருந்த நிக்ஷாவின் கைப்பேசி எண்ணை அழைத்தாள், தொலைபேசி அலறி ஓய்ந்தது, நிக்ஷா பதிலளிக்கவில்லை. அவள் வீட்டிற்கு நடந்ததை தெரிவித்துவிட்டு காவல் துறையில் புகார் செய்யலாம் என எண்ணிக்கொண்டே நிக்ஷாவின் வீட்டு எண்ணைத்தட்ட ஆரம்பிக்க, அவள் தொலைபேசி ஒரு அழைப்பில் அலறியது,ஹலோ, என்று அவள் குரல் கொடுக்க, மறுமுனையில், அவள் அம்மாவின் குரள் மிக மிக சோகமாக,
மீனா, உன் உயிர்தோழி நிக்ஷா, நேற்று இராத்திரி இங்கே ஒரு நெடுஞ்சாலை விபத்தில் இறந்துவிட்டாள்!!!!!! அடக்கடவுளே! அவள் தாய் மேலும் நடந்த விபத்தைப் பற்றி ஏதேதோ பேசிக்கொன்டே இருந்தார், மீனாவின் கண்கள் நிலைகுத்தி நிற்க, காதில் எதுவுமே விழவில்லை...அப்படியானால் அன்று அங்கே அவளோடு வந்தது யார்???????????????"
பி.கு : உண்மைச்சம்பவத்தை அடிப்படையாகக்கொன்ட கதை.


4 comments:

tamilvanan said...

உண்மையாலுமா....?

சிவனேசு said...

ஆமாம், தமிழ்வாணன் மெய்யாலுமே நடந்ததுதான்.

கிருஷ்ணா said...

நட்பு..! அந்த மூன்றெழுத்துக்குத்தான் எத்தனை வலிமை..! வாழ்க நட்பு!

சிவனேசு said...

உண்மைதான் நண்பரே, நல்ல நட்பு பல சமயங்களில் இரத்த சொந்தங்களையும், பந்த பாசங்களையும் மிஞ்சிவிடுகின்றது.

என் வாழ்வில் ஒரு சம்பவம், ஒருமுறை நான் விபத்தில் சிக்கிவிட்டேன், என் பெற்றோர் என்னை மருத்துவமனையில் சேர்த்தனர். மறுநாள் காலையில் கண்விழிக்கும் பொழுது என் ஆருயிர்த்தோழி என் பக்கத்தில் எனக்காக‌ அமர்ந்திருக்கிறாள்! என் கையைப்பற்றி ஆறுதல் சொல்லி பயமுறுத்தாமல், இதெல்லாம் ஒன்றுமேயில்லை நீ தேறிவிடுவாய் என்றாள் தனக்கே உரிய குறும்புத்தனத்தோடு!

நல்ல நண்பர்கள் வாய்ப்பது ஒரு வரம்!