.

.
.

Saturday, June 13, 2009

வர்ண ஜாலம்


அதிகாலை மஞ்சள் நிறம், அந்தி வானின் சிவந்த நிறம், கடலலையின் நீல நிற‌ம், கவிக்குயிலின் கருமை நிறம், பசுஞ்சோலையின் பச்சை நிறம், படர்ந்த மேகங்களின் வெண்மை நிறம், இவை அத்தனையும் தன்னகத்தே கொன்ட வானவில்லின் வர்ணஜாலம் என இவ்வுலகில் வர்ணங்களின் அரசாட்சி அளவில்லாதது, அற்புதமானது

இத்தகைய சிறப்பு வாய்ந்த வர்ணங்களின் பயன்பாடுகள் மனித வாழ்வில், உடலையும் மனதையும் சேர்த்து பாதிக்கின்றன, ஆதலால் ஆதி காலந்தொட்டே நோய்களை குணமாக்க வர்ணங்களை உபயோகிக்கும் வர்ண சிகிச்சை முறை பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வர்ணங்களையும் அதன் குணாதிசயங்கள் மற்றும் பயன்பாடுகளை காண்போம்.

வர்ணங்களின் பயன்க‌ள்

சிவ‌ப்பு
கவர்ச்சியை தருவதோடு, சுபீட்சத்தையும் அளிக்கிறது. உடம்பில் ஏற்படும் வலிகளை போக்கக்கூடியது. தோல் நோய்க‌ளை குண‌மாக்க‌ வ‌ல்ல‌து.
பாசம் தொடர்பானது.


ஆரஞ்சு
நீரால் ஏற்படும் நோய்களுக்கு நல்லது

மஞ்ச‌ள்
சீர‌ன‌ ச‌க்தியை த‌ருகிற‌து
உள்ளுறுப்புக்க‌ளுக்குச் ச‌க்தியை அளிக்கிற‌து.

பச்சை
பொருளாதாரத்தை மேம்படுத்தக்கூடியது.
இரக்க குணம் ஏற்படும்.குளிர்ச்சியைத் தரக்கூடியது.
நுரையீரல் சம்பந்தப்பட்ட‌ அனைத்து நோயையும் குணமாக்க வலலது.

நீல‌ம் (வெளீர் நீல‌ம்)
க‌ற்ப‌னைத்திற‌னை அதி‌க‌ரிக்க‌க்கூடிய‌து.
குடும்ப‌த்தில் ம‌கிழ்ச்சியை ஏற்ப‌டுத்த‌க்கூடிய‌து.
ந‌ர‌ம்பு ம‌ன்ட‌ல‌த்திற்கு ச‌க்தி கொடுக்க‌க்கூடிய‌து.

கருநீல‌ம்
த‌லைமைத்துவ‌ம் த‌ர‌க்கூடிய‌து.
அதீத‌ ஆற்ற‌லை அளிக்க‌க்கூடிய‌து.
சூட்சும‌ உட‌லுக்கு ந‌ன்மை த‌ர‌க்கூடிய‌து.

செங்கருநீல‌ம்
பிர‌ப‌ஞ்ச‌ தொட‌ர்பை ஏற்ப‌டுத்த‌க்கூடிய‌து.
பொது ஆரோக்கிய‌த்திற்கு உகந்த‌து.
சுரப்பிகள் அனைத்தையும் தட்டி எழுப்பக்கூடியது.

வர்ண மூச்சுப் ப‌யிற்சி

நீண்ட‌ வ‌ர்ண‌ மூச்சை மூக்கின் வ‌ழியே உள்ளூக்கிழுத்து, உட‌னே நீண்ட‌ வ‌ர்ண‌ மூச்சை மூக்கின் வ‌ழியே வெளிவிட‌வும். இதைப்போலவே வ‌ர்ண‌த்தை மூச்சாக‌ உள்ளூக்கிழுத்து அதே வ‌ர்ண‌த்தை வெளியிட‌ வேண்டும். இவ்வாறு செய்வ‌த‌ன் மூல‌ம் வ‌ர்ண‌ங்க‌ளின் முழுப்ப‌ல‌னையும் பெற்று சிற‌ப்பாக‌ வாழ‌ முடியும்.

மூச்சுப்ப‌யிற்சிக்கு ப‌ய‌ன்ப‌டுத்த‌ப்ப‌டும் வ‌ர்ண‌ங்க‌ளும் அத‌ன் ப‌லன்‌க‌ளும்

சிவ‌ப்பு ‍- காந்த‌ ச‌க்தி, உட‌‌ல் வ‌லிமை, ந‌ர‌ம்பு ம‌ண்ட‌ல‌த்திற்கு ப‌ல‌ம‌ளிக்கும், உள்ளாற்ற‌ல் பெருகும்.

ஆர‌ஞ்சு - ம‌ன‌ அமைதி, இர‌க்க‌ம், க‌வ‌ர்ச்சி

ம‌ஞ்ச‌ள் - உக்ஷ்ண‌ம், சீர‌ண‌ ச‌க்தி, உள்ளூண‌ர்வு, வர்த்தகர்களுக்கு பொறுத்தமானது

ப‌ச்சை - குளிர்ச்சி, ஞாப‌க‌ ச‌க்தி, டெலிப‌தி ச‌க்தி, ம‌ன‌ வ‌லிமை

நீல‌ம் - உள்ளாற்ற‌ல் நோய் எதிர்ப்பு ச‌க்தி, ம‌ன‌ அமைதி, முதுமையைத் த‌டுத்த‌ல்

கருநீலம் - தலைமைத்துவம், பிரபஞ்ச தொடர்பு, மூளையின் சக்தி
ஞான பாதை, தெய்வீக காட்சிகள், தீர்வு, மனசாந்தி

வெள்ளை - ஒளி ‍ பூர‌ண‌த்துவ‌ம், இறைச‌க்தி, ஜீவ‌ ச‌க்தி

கிழமைகளுக்குரிய நிறங்கள்


அந்தந்த கிழமைகளில் அதற்குரிய வர்ண உபயோகங்கள் சாதகமான பலன்களை அளிக்கக்கூடும்.ஞாயிறு - இளஞ்சிவப்பு , செம்பு
திங்கள் - வெண்மை, வெளீர் நீலம்
செவ்வாய் - சிவப்பு
புதன் - பச்சை
வியாழன் - மஞ்சள்
வெள்ளி - வெண்மை
சனி - கருப்பு, சாம்பல் நிறம்

2 comments:

VIKNESHWARAN said...

இதைத் தான் வண்ண ஜாலங்கள் என்கிறார்களா? நல்ல சங்கதி....


pls remove ur word verification... it will make readers easy to comment on ur articals...

dashboard-- setting--- comment---- word verification(11th option if not mistaken)

சிவனேசு said...

வருகைக்கும், கருத்துக்கும், வழிகாட்டுதலுக்கும் மிகவும் நன்றி விக்னேக்ஷ்வரன், உடனே திருத்திவிடுகிறேன், வேறு ஏதேனும் குறைகள் தென்பட்டாலும் கண்டிப்பாக தெரிவியுங்கள்.