இன்னல் தீர்ந்தே இன்பம் மலர்ந்திட இனிய புத்தாண்டு 2010 இன்று புலர்ந்தது நல்வாழ்த்துக்கள் நண்பர்களே...
அடியேனின் இந்த 51 பதிவை எட்டிப்பார்த்திருக்கும் நண்பர்களுக்கும், நாம் பதிவிடத்துவங்கிய காலந்தொட்டு இன்றுவரை (ஏதோ ஆயிரமாயிரம் பதிவுகள் தந்து விட்டதைப்போல, என்னே ஒரு தற்புகழ்ச்சி! தாங்களைடா சாமி...!)எமது அறுவையையும் கிறுக்கல்களையும் பெரிய மனதோடு பொறுத்துக்கொன்டும், ஏற்றுக்கொன்டும் நமக்கும் ஒரு பதிவர் எனும் பெருமையை வழங்கி நம்மோடு பதிவுலகில் கைகோர்த்திருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் இவ்வேளை எமது உளமார்ந்த நன்றி மலர்களை சமர்ப்பிப்பதில் நாம் பெருமையும் பேருவகையும் அடைகிறோம்...!
சுவையான சமையலைப்போல் சுவாரஸ்யமான விடயம் இன்று தங்களோடு பகிர்ந்து கொள்ள...(ஆத்மா மெகாத் தொடரை முடிக்கப்போகிறேன் என்று மட்டும் நினைத்துவிடாதீர்கள் நண்பர்களே...! :)

கண்டீர்களா நண்பர்களே, அழகான விருது, அதை அளித்தவரும் ஒரு சிறப்பான பதிவுக்கு சொந்தக்காரர், அவர் திருமதி மேனகா சத்தியா அவர்கள்...! சசிகா பதிவின் சொந்தக்காரர், இவர் ஒரு அற்புதமான சமையல் நிபுணர் என்பது இவர் பதிவில் நாளொரு சுவையும், பொழுதொரு வண்ணமுமாக மணக்கும் சமையல் குறிப்புக்கள் வழி நம்மால் அறிய முடிகிறது, இவர் சமையல் குறிப்புக்களால் அசத்துவதைப்போலவே, நம்மை அங்கீகரித்து அளித்த இந்த விருதும் நம்மை அசத்தி, ஆனந்தத்தில் எம்மை ஆழ்த்திவிட்டது... விருதுக்கு நன்றி சகோதரி...!
http://sashiga.blogspot.com/2009/11/blog-post_25.html
இப்பதிவுலகில் நமது நட்பை ஏற்று நமக்கு தமது வற்றாத அன்பையும் ஆதரவையும் நட்பு வடிவிலும், நயமான பின்னூட்டங்களின் வடிவிலும் வழங்கி ஆதரவளித்த அன்புள்ளங்கள் அத்தனைபேருக்கும் இந்த விருதை அன்போடு அர்ப்பணிப்பதில் பெருமகிழ்வும் பேருவகையும் அடைகிறோம், பெறுபவர்களும் அன்போடு ஏற்று அகமகிழ்வார்கள் என நம்புகிறோம்...
இந்த இனிய புத்தாண்டு நன்னாளில் இவ்விருதை நண்பர்களோடு பகிர்ந்து கொள்வதில் பெரிதும் மகிழ்ச்சியடைகிறோம்! இதோ அடியேனின் பார்வையில் அந்த அற்புத பதிவர்கள்...
1.முத்தான பதிவர். எமது பதிவுலகப்பாதையின் வழிகாட்டி, அய்யா மலாக்கா முத்துக்கிருக்ஷ்ணர் அவர்கள்...!
2.துணிச்சலான கருத்துக்களுக்கு சொந்தக்காரர். அரசியல் நிகழ்வுகள் குறித்த அவர் படைப்புகள் வேகம் + விவேகம், பதிவர் ஓலைச்சுவடி சதீசு குமார் அவர்கள்.
3.நவீனத்துவம் + சுவாரஸ்யங்கள் இழையோடும் பதிவுக்கு சொந்தக்காரர், அநங்கம் இதழாசிரியர் கே.பாலகுமாரன் அவர்கள்.
4.கவிதைகளாகட்டும், கருத்துக்களாகட்டும் தன்னலமின்றி பொதுநலம் சார்ந்து பதிவுகள் வழங்கும் மனோவியம் மனோகரன் அவர்கள்
4.யதார்த்தம் கலந்த படைப்புகளால் வாசகர்களைக் கவரும் வாழ்க்கைப்பயணம் விக்கினேசு அவர்கள்
5.கவின்மிகு கவிதாயினி தோழி புனிதா அவர்கள்!
6.இனிய கவிதைகளூக்கு சொந்தக்காரர், நண்பர் கவித்தமிழ் கிருக்ஷ்னா அவர்கள்
7.பின்னூட்டங்களுக்காகவே இந்த விருது பெறுபவர் நமது தல தமிழ்வாணன் அவர்கள்.
இவ்வேளை நம்ம பின்னூட்ட செம்மல் தல தமிழ்வானன் அவர்களுக்கு ஒரு விண்ணப்பம், கூடிய விரைவில் தாங்களும் தமிழ்ப்பதிவராக பதவி உயர்வு பெற்று, தங்களின் படைப்புகளின் வழி தமிழ்ப்பதிவுலக்கு ஒளிசேர்க்குமாறு எட்டுப்பட்டி பதிவர்கள் சார்பாக காரசாரமாக கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள் ! (ம்ம்ம், எத்தனை நாளைக்குத்தான் பின்னூட்டங்கள் வழி எங்கள் தலையையே உருட்டுவீர்கள், பின்னூட்டங்கள் வழி நாங்களும் உங்களை கலாய்க்க வேண்டாமா ? )
விருதுகளை வாரி வழங்குவதில் நாம் பாரி வள்ளல் என்பது அனைவரும் அறிந்த விடயமே...(இதெல்லாம் ரொம்ம்ம்ப்ப்ப்ப்ப ஓவர்)
மேலும் பலரோடும் இவ்விருதை பகிர்ந்து கொள்ள நமக்கு பெரிதும் ஆவல்தான், என்ன செய்வது அறிமுகமின்மை நமது ஆசைக்கு தடைபோடுகிறதே, என்ன செய்ய...!
நல்லது நண்பர்களே, மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம் அதுவரை அன்புடன்....