.

.
.

Tuesday, September 29, 2009

தேடிவந்த தேவதை



ஒரு தேவதை வந்துவிட்டார் தமிழ்ப்பூங்காவைத்தேடி...

உண்மைதான் நண்பர்களே... கேட்கும் 10 வரங்களை நிறைவேற்றும் அந்த அற்புதமான தேவதையை அனுப்பியது இயற்கை எனும் ஒரு இனிய‌ தேவதை...(ரொம்ம்ப்ப்ப‌ ந‌ன்றி இய‌ற்கை, நீங்க ரொம்ப்ப ரொம்ப்ப நல்லவிங்கபா..., நமக்கும் ஒரு தேவதையை ந்ல்ல மனசோட அனுப்பிச்சிருக்கிங்களே... :-)

சரி தேவதைக்கு நிறைய கடமைகள் இருப்பதாலும், பல பேரை சந்தித்து வரமளிக்க வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் இருப்பதாலும் காலந்தாழ்த்தாமல் நமது பல்லாயிரக்கணக்கான கோரிக்கைகளில் சிறந்த , பத்து, இதோ தேடிவந்த‌ தேவ‌தையின் கடைக்கண் பார்வைக்காக...

1.கடவுள் கடவுள்னு ஒருத்தரை நம்புறோமே, அவரை கண்ணில் காட்டச் சொல்லணும்! (எமது இரத்தங்கள் ஈழத்தில் இரத்தம் சிந்திக்கொன்டிருக்க உமக்கு அவர்களைக் காப்பாற்றாமல் வேறென்ன தலை போகிற‌ வேலைன்னு சண்டை போடணும்! )
தேவ‌தை : அட, எங்கேப்பா அந்த‌ இய‌ற்கை ? எப்பேர்ப‌ட்ட‌ ஆள்கிட்ட‌ என்ன‌ மாட்டி விட்டிருக்கு ம‌க‌ராசி! :-(


2.நினைத்த பொழுது நினைத்த இடத்திற்கு சென்று வரும் சூப்பர் பவர் வேணு‌ம்! (ஹோல்லோவ் மேன் போல!) ந‌ம்ம பதிவை யார் யாரெல்லாம் திட்றாங்கன்னு அவ்ங்களுக்கே தெரியாம கண்டுபிடிச்சிடுவோம்ல...! :-))
தேவதை : நீ இப்டியே கேள்வி கேளு! நான் இப்போ காணாமப் போகப் போறேன் பாரு!

3.அடுத்த பிறவி வேணாம்! வேற வழி இல்லாமல் மீண்டும் அவதரிக்க நேர்ந்தால் ஒரு தமிழச்சியாகவே பிறக்கும் பாக்கிய‌ம் வேணும்!
தேவதை : "தமிழ்ப் பற்றாம்! தாங்கலடா சாமி!"

4.ந‌மக்குப் பிடித்த அத்தனை உறவுகளுக்கும் முன்பதாக வாழ்வை முடித்து வானுலகம் ஏகிடனும்! பிடித்தவர்களுக்கு பிரியாவிடை சொல்வது நமக்குப்பிடிக்காது! :-(
தேவதை : கன்பார்ம் நரகம்தேன்!

5.பணம் காய்க்கும் மரம் ஒன்று பணப்பெட்டிக்கு பக்கத்தில் வேண்டும். (எனக்காக‌ இல்லப்பா, சொன்னால் நம்புங்க! பெரிய பங்களா கட்டி , பக்கத்திலே பெரிய பூங்தோட்டம்லாம் கட்டி, அப்புறம் ஏழ்மையை துடைத்தொழிக்கப்போறோம்!!!? :-))
தேவதை : ஏழ்மையை ஒழிப்பாங்களாம்! கதை விடுற்த பாரு! இது மாதிரி வரம் கேட்ட எத்தனை பேர என் சர்வீஸ்ல பார்த்திருப்பேன்!

6.அப்பாவி மக்களை ஏமாற்றும் அடப்பாவி அரசியல்வியாதிகளெல்லாம் நல்லவர்களாய் மாறி நாட்டுக்கு தொன்டாற்ற வேணும்!
தேவதை : இருந்தாலும் உனக்கு ஓவர் பேராசை சிவனேசு! :-)

7.ந‌மக்குப் பிடித்த நண்பர்கள் அனைவரும் இன்றும் இறுதி வரை என்றும் நமக்கு நண்பர்களாகவே இருக்கும் அதிர்க்ஷ்ட‌ம் வேணும்.
தேவதை : பாவம்பா அவங்க!

8. இந்தப் பதிவைப் படிக்கும் அத்தனை வாசக நண்பர்களின் ஏதாவதொரு ந‌ல்ல ஆசையை நிறைவேற்ற வேணும் (சிவனேசு, சீக்கிரம் மர்மத்தொடரை முடிக்கனும் எனும் வேண்டுதலை மட்டும் தவிர்த்து! :-))
தேவ‌தை : ம்ம்ம் ந‌ட‌க்க‌ட்டும்! ந‌ட‌க்க‌ட்டும்!

9. உல‌க‌த்தின் வெப்ப‌ம‌ய‌ம் நாளுக்கு நாள் கூடிட்டே போகுது! எல்லா பூமி வ‌ள‌ங்க‌ளும் தீய்ந்து அழியும் முன் உலகத்தை சுற்றி ஒரு பெரிய‌ குடை வேணும்!
தேவ‌தை : ஆமாம்! முன்னேறுறேன் பேர்வ‌ழி என்று க‌ண்ட கண்ட‌ க‌ண்டுபிடிப்புக்க‌ளால் ஓசோனில் ஓட்டை போட‌வேண்டிய‌து, அப்புற‌ம் பேக் ஃபையர் ஆனப்புறம் ந‌ல்ல‌ பிள்ள‌ங்க‌ மாதிரி இப்படி ஞாய‌ம் வேற‌ பேசுற‌து!

10.அடியேனின் ந‌ண்ப‌ர் ஒருவரின் அன்புத்தாயார், 63 அகவை கொன்ட அவர் பெயர் தி‌ரும‌தி.மீனாம்பிகை, அந்த‌த் தாய் த‌ற்ச‌ம‌ய‌ம் புற்றுநோயால் பாதிப்புற்று வாடுகிறார். அவ‌ர் ந‌ல்லபடி ந‌ல‌ம் பெற்று ச‌க‌ஜ‌ வாழ்க்கைக்கு கூடிய விரைவில் திரும்ப வேண்டும்.
தேவ‌தை: "ந‌ல்ல‌வ‌ர்க‌ளை இறைவ‌ன் சோதிப்பான் ஆனால் கைவிடமாட்டான்"

வரமளித்த தேவதைக்கு நன்றி, வழிகாட்டி அனுப்பி வைத்த இயற்கை தேவதைக்கும் நன்றி, பதிவை படித்து விட்டு கமென்டு போடும் தேவதைகளுக்கும் நன்றி.அடுத்து இந்த தேவதையை நான் சிலருக்கு அனுப்புகிறேன் :-

* குறை ஒன்றும் இல்லாத குறை ஒன்றும் இல்லை அவர்கள்,
* சுவீட் பிரண்டு சுபாசினி,
* புன்னகைப்பூ புனிதா,
* தல தமிழ்வானன் அவர்கள்,
* நல்ல நண்பர் வாழ்க்கைப்பயணம் விக்கினேசு,
*மனோவியம் மனோகரன் அவர்கள்

இறுதியாக இந்த‌ப் பதிவை வாசிக்கும் தேவதை‌‌களே! உங்கள் அனைவருக்கும் ஒரு அன்பு வேண்டுகோள், அன்பு கூர்ந்து நோயால் பாதிப்புற்றிருக்கும் அந்தத் தாய்க்காக‌ பிரார்த்த‌னை செய்யுங்க‌ள்! உங்க‌ள் பிரார்த்த‌னை ம‌க‌த்தானது, ஒரு குடும்ப‌ தீப‌த்தின் சுட‌ர் பிர‌காசிக்க‌ அது நிச்ச‌ய‌ம் உத‌வும்! எந்த மனித மனம் பிற‌ உயிர்க்கு இர‌ங்குகிற‌தோ அந்த இதயமே இறைவன் வாழும் இருப்பிடம், த‌ய‌வு செய்து தொடர்ந்து பிரார்த்தனை செய்யுங்க‌ள்! கூடிய‌ விரைவில் அந்த‌த்தாய் ப‌ரிபூர‌ண‌ ந‌ல‌மடைந்து விட்ட‌ ந‌ல்ல‌ செய்தியோடு அடுத்த‌டுத்த‌ ப‌திவுக‌ளில் உங்க‌ளைச் சந்திக்கிறேன், என்றும் அன்போடு...

18 comments:

VIKNESHWARAN ADAKKALAM said...

நான் ஸ்ரேயாவை கல்யாணம் பண்ணிக்கனும் உங்க தேவதை ஹெல்ப் பண்ணுமா

Sathis Kumar said...

அந்த தாய் பூரண நலமடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன். ”சிவகாமியின் சபதம்” படித்துவிட்டு கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள் சிவனேசு. நான் ‘கல்கி’யின் பரம ரசிகன்.. :)

bavanitacinamurty said...

antha anbu thai gunam adaiya nanum prathanai seikiren.

sivanes said...

VIKNESHWARAN

சிவாஜி தெ பாஸ் சண்டைக்கு வருவார், த‌யாரா இருங்க பாஸ் !!! :-))

sivanes said...

ஒற்றன்

தங்களின் பிரார்த்தனை நிச்சயம் நல்ல பலனைத்தரும்! சிவகாமியின் சபதம் படித்து விட்டு கருத்துகளைப் பகிர்ந்து கொள்ள கூடிய விரைவில் முயற்சி செய்கிறேன்.

sivanes said...

bavanitacinamurty

thanks dear!

குறை ஒன்றும் இல்லை !!! said...

எனக்கு தேவதயா? ஹி ஹி ஹி நன்றி.. நீங்க இத கூட பண்றங்களா!!!!

Anonymous said...

அவர் சீக்கிரமே நலம்பெற பிராத்திக்கிறேன்!

sivanes said...

குறை ஒன்றும் இல்லை !!!

ஆமாம் தல ! ஏதோ நம்மால முடிஞ்து...:-))

sivanes said...

புனிதா||Punitha

ரொம்ப நன்றி ராசாத்தி ...! :-)

*இயற்கை ராஜி* said...

ம்ம்..கலக்கிட்டீங்க...

மனோவியம் said...

அன்பின் சிவனேசுக்கு....உங்களின் நல்ல எண்ணங்களின் ப்டி இந்த வையம் வாழவும் வளரவும் அந்த தேவதை அருள் தரவேண்டும்.அதே போன்று தங்களும் தங்கள் குடும்பமும் பல்லாண்டு பல்லாண்டு வாழ வேண்டும் அந்த தேவதையை இறைஞ்சுகிறேன். மற்றவர்கள் வாழவும் அவர்கள் நலம் பெற வேண்டும் உங்கள் நல்ல மனம் போற்றுதல் குறிய்து.வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
நல்ல மனம் வாழ்க, நாடு போற்ற வாழ்க சிவனேசு.....

sivanes said...

இய‌ற்கை

நன்றி நன்றி, இயற்கைமகளே...!( இரண்டு நன்றி, ஒன்று தேவதையை அனுப்பியதற்கு, மற்றொன்று அன்பான தங்களின் பாராட்டுக்கு :-)

sivanes said...

manokarhan krishnan

வாழ்த்துக்கு நன்றி நண்பரே...! தேவதை தங்களுக்கும் அனுப்பப்பட்டிருக்கின்றார் பாருங்கள்! உங்களது உள்ளக்கோரிக்கைகளையும் ஒரு பதிவாக எதிர்பார்க்கிறேன்...! :-)

Tamilvanan said...

தேவ‌தைக்கு ந‌ன்றி.சிவ‌னேசு என்ற‌ தேவ‌தைக்கும் ந‌ன்றி.

sivanes said...

வாங்க தல வாங்க...! தேவதையை உங்களுக்கும் அனுப்பியிருக்கோமல...! :-)

Menaga Sathia said...

பதில்கள் அருமை!!

நண்பரின் தாயார் விரைவில் குணமடைய ப்ரார்த்திக்கிறேன்!!

மனோவியம் said...

பூத்துக் குலுங்கும் தமிழ் பூங்காவனம்

அழகு மிளிரும் சாலை
அன்பு மிகும் சோலை
பண்பான பூக்களை
பார்வைக்கு வைக்கும்
தமிழ் பூங்கா

பருவங்கள் மாறுப்படலாம்
மனப்பக்குவங்கள் வேறுப்படலாம்
உருவங்கள் இரண்டு படலாம் -- தமிழ்
உள்ளங்கள் மாறுப்படலாமா?

தமிழனுக்கு தாய் வேறுப் படலாம்
தாலாத தாய் அன்பும் மாறுப் படலாம்
தாய் மொழி தமிழனுக்கு வேறாகுமா -- தாய்மை
தமிழ் தான் தாழ்வாகுமா?

எண்ணியவைகள்
எல்லாம் நல்லவைகளாக
எண்ணங்கள் எல்லாம் - தமிழ்
வண்ணங்களாக ட்டும்

பூத்து குலுங்கும் பூக்கள்லேல்லாம்
புத்துலகு பார்வையாகட்டும்
புதுமை பூக்கள் எல்லாம் - தமிழ்
பா க்களாக ட்டும் - பாதை கலாக ட்டும்

எழில் கொஞ்சும் தமிழ் பூங்கா
ஏற்றம் காணட்டும்
ஏந்திழையே - உந்தன்
எழில் கொஞ்சும் பார்வையால் -- தமிழ்
பூங்கா வாழட்டும் வளரட்டும்

குறிப்பு: முகம் காண அன்புச் சகோதரியே
உங்கள் தமிழ் முக வரிக்கு-- இந்த
அறிவின் சிறியோனின்
அன்பான வாழ்த்துக்கள்
மனத்திடத்தோடு
மாநிலம் போற்ற வாழுங்கள்..
குறைகளை சுட்டிக்காட்டுங்கள்.
நிறைகளை போற்றி வாழ்த்துங்கள்.
வலை அகப்பகத்திலே
நிறைய நல்லோர் உண்டு
நல்ல இலச்சிய வாதிகள் உண்டு
நல்ல அறிஞர்கள் உண்டு
நன் மதியாளார்கள் உண்டு
வாழ்க்கை தெளிந்தோர் உண்டு
சீர்த்திருத்தவாதிகள் உண்டு
சிந்தனை யாளார்கள் உண்டு
அவர்களின் கருத்துக்களை மதிப்பதித்து ஆய்ந்து ஏற்றிப் போற்றுங்கள்.


தீபத்திருநாள் நல் வாழ்த்துக்கள்.
வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன்!
அன்புடன் மனோவியம் மனோக்கரன்