சுமார் 10 மணி இரவு இருக்கும், கடமை முடிந்து, கண் அயரும் நேரம், "ஜெய் ஜக்கம்மா!" என கணிணீயிலிருந்து ஒரு அசீரரி, என்னவோ ஏதோவென்று நாமும் கண்ணைக்கசக்கிக் கொன்டு கனினியைநோக்க, அங்கே! "எங்கிருந்தாலும் உடனடியாக இந்த பக்கத்திற்கு வரும் படி அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்.. மீறினால் ஜக்கம்மாவின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்...."
இப்படி ஒரு அன்பு எச்சரிக்கை நம்ம குறை ஒன்றும் இல்லாத, "குறை ஒன்றும் இல்லை" பதிவரிடமிருந்து! ஆத்தா கோபத்துக்கு ஆளாக முடியுமா? இரவாவது! தூக்கமாவது! பின்னங்கால் பிடரியில் பட எடுத்த ஓட்டம், குறை ஒன்றும் இல்லை பதிவில் நாம் அடுத்த நிமிடம்!
பார்த்தால் நண்பர் "குறை ஒன்றும் இல்லை" அவர்கள் அழகான ஒரு விருது அது நட்பைப் போற்றும் விருது என்பது அதன் தனிச்சிறப்பு, தூக்கிக் கையில் கொடுத்து நமை வாழ்த்த! அந்த "நொடி" உண்மையிலேயே மிகவும் உன்னதமான வாழ்க்கை "வானவெடி" போங்கள்!
சந்தோசம், சிரிப்பு, உற்சாகம், ஆனந்தக் கண்ணீர் என நவரசமாய் பொங்கிய பல உணர்ச்சிகளையும் பயங்கரமாய் கட்டுப் படுத்திக்கொன்டு, நண்பரின் விருதுக்கு ஒரு நன்றி பின்னூட்டம் நயமாக வைத்துவிட்டு, அவர் கொடுத்த விருதோடு, அக்கரை எனும் பொன்னாடை, நட்பு எனும் பணமுடிப்பு ஆகியவற்றையும் பெற்றுக்கொன்டு தமிழ்ப்பூங்காவிற்கு ஓடி வந்து சேர்ந்தேன்.
நேற்று இரவு நான் தூங்கியிருப்பேன் என்று நினைக்கிறீர்களா! அது தான் கிடையாது! சுத்தமாக ஒரு பொட்டு தூக்கமில்லை, "இதற்குமுன் விருது வாங்கிய அனுபவமே கிடையாதே அதனால்தான்" என நினைக்கிறீர்கள் அல்லவா, உண்மையாயிருந்தாலும் அது தவறு!
நிஜத்தில் என்னவென்றால் அடுத்தபடியாக நாமும் நமது நண்பர்களாக நாம் நினைப்பவர்களுக்கு, நம்மை நண்பராக ஏற்றுக் கொண்டவர்களுக்கு இதைக் கொடுத்து, அவரும் நம்மையும் ஒரு பொருட்டாக மதித்து இதை ஏற்றுக்கொன்டு, நம்மையும், நமது நட்பையும் கெளரவிக்க வேண்டுமே எனும் நினைப்பு!
மனம் கூட்டிக்கழித்து கணக்குப் போட்டதில் பல தேர்வுகளிலிருந்து சில முடிவுகள்! இவை அத்தனையும் சுய நினைவோடு, யாவரிடமும் கையூட்டு வாங்கிக்கொன்டு தேர்வுக்குழுவினரால்(அடியேன் மட்டுமே) பலவித குவிசுகள், சூடான கேள்விபதில்கள், குரோஸ் வேர்டு பரிட்சைகள், ஓட்டப்பந்தயங்கள் என திறமைக்கு சவாலான பரீட்சைகள் அனைத்தும் வைக்கப்பட்டு அதில் வெற்றிகரமாக ஜெயித்த வெற்றியாளர்கள் இவர்கள் என்பதையும் தெரிவித்துக்கொன்டு, இன்றைய நமது பாராட்டு விழா மேடைக்கு செல்வோம் வாருங்கள்!
பாராட்டு மேடையிலே தமிழ் கூறு நல்லுலகின் ஒட்டு மொத்த பிரபல்யங்களும் ஒன்றாக அமர்ந்திருக்கின்றனர்! அவர்களுக்கு நடுவே நிகழ்ச்சியைத் தலைமை தாங்க நமது சிறப்பு விருந்தினர் திருவாள்ர்."குறை ஒன்றும் இல்லை" அவர்கள் (நல்லவேளை, நைசா பாராட்டியாச்சு!இல்லேன்னா ஜக்கம்மாகிட்டே சொல்லிப்புடுவார் மனுக்ஷன்!)
மேலும் பூங்கா முழுக்க அழகழகாய் பல பதிவுலக தோழிகளும் "ஹேன்சம்", "மாச்சோ"வுமாக பல பதிவுலக காளையரும் இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொன்டிருக்கின்றனர்!
இந்த நிகழ்ச்சிக்காகவே வீட்டில் அழுது அடம்பிடித்து புது கோட்டு சூட்டெல்லாம் வாங்கிப் போட்டுக்கொன்டு கிளாமரான அவைத்தலைவராக வரவேற்புறை நிகழ்த்தத்துவங்கிய நம் திரு.தமிழ்வானன் அவர்கள் மைக்கைப் பிடித்து பேசுகிறார்... பேசுகிறார்... பேசிக்கொன்டேயிருக்கிறார்... அதற்குமேலும் பொறுக்க முடியாமல் பதிவர்கள் நால்வர் மேடைக்கு ஓடிப்போய் அவரை குண்டுக்கட்டாக கீழே தூக்கிவர, மைக்கை தரமாட்டேன் என அவர் அடம் பிடிக்க தமிழ்ப்பூங்காவே சில நேரம் ஆடிபோய்விட்டது போங்கள்!
அடுத்ததாக சிறப்புரையாற்ற ,நல்லவர் இதயத்தில் இருந்து வந்திருந்த திருவாளர்."குறை ஒன்றும் இல்லை" அவர்கள், எழுந்தார், மைக்கை கையிலெடுத்தார், அவர் உதிர்க்கப்போகும் உரைக்காக கூட்டம் மொத்தமும் கூர்மையாய் காதுகளைத் தீட்டிக் கொன்டு காத்திருக்க மனுக்ஷன் ஒரே வரி, அதிலும் மூன்றே சொற்கள் "குறை ஒன்றும் இல்லை" என சொல்லிவிட்டு வாத்தியார் எம்.ஜி.ஆர் அவர்கள் பாணியில் கூட்டத்தை நோக்கி கையை அசைத்து விடை பெற்றுக்கொன்டார்! கூட்டம் "ஙே" என்று சிறிது நேரம் விழித்து விட்டு அவ்ளோதான் உரை போலும் என முடிவுக்கு வந்து பலமாக கையை தட்டுகிறது...தட்டுகிறது...தட்டிக்கொன்டேயிருக்கிறது..., அதில் எங்கே திரும்பிவந்து பேச ஆரம்பித்துவிடப்போகிறாரோ எனும் பயமும் சற்று ஒளிந்திருந்ததை காண முடிந்தது! :)))
சரி அடுத்ததாக நிகழ்ச்சியின் உச்சக்கட்டமாக விருது வழங்கும் நிகழ்ச்சி! அழகான வெண்புறா நம்ம தோழி சுபாதான், நேர்த்தியாக சேலையில் விருதுகளை, தங்க வேட்டை ரம்யாவைவிட விலை அதிகமான நகை(புன்னகை தானுங்கோ) அணிந்து எல்லோரையும் கவர்ந்தபடி மேடையில் விருதுகளை தங்கத்தட்டில் வைத்துத் தர,
அதிகம் பேச மாட்டேன் என உத்தரவாதம்(கையெழுத்துப்பிரதியாக) வாங்கிக் கொள்ளப்பட்டு மீண்டும் திரு.தமிழ்வானன் அவர்கள் மேடையேறி மைக்கைப்பிடித்துக்கொன்டு நாம் எழுதிகொடுத்தபடி விருது பெற்ற பதிவர்களை மேடைக்கு அழைக்க, பிண்ணனியில் அவ்ர்களின் பதிவுகள், அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாய் வெண் திரையில் பிரதிபலிக்க...
இதோ எனக்கு நண்பர்களாக வாய்த்து என்னையும் நட்பையும் பெருமைபடுத்திய எனது நண்பர்கள் ...
* உரிமைக்குப் போராடும் நல்ல நண்பர் ஓலைச்சுவடி சதீசு குமார் அவர்கள்
* பதிவுலகப்புயல் நண்பர் வாழ்க்கைப்பயணம் விக்கினேசு அவர்கள்
* நல்லவர் இதயத்திலிருந்து நண்பர் "குறை ஒன்றும் இல்லை" அவர்கள்
* இலக்கிய நண்பர் கவித்தமிழ் கிருக்ஷ்ணா அவர்கள்
* என் உலகத்திலிருந்து அன்பு தோழி சுபா அவர்கள்
* பின்னூட்டப்புயல் நம்ம தல தமிழ்வானன் அவர்கள்
* பிறமொழிப் பதிவராயிருந்தும் தமிழ்ப்பூங்கா வாசகரான "ரஞ்சீதா'ஸ் கார்னர்" " ரஞ்சீதா அவர்கள்
* விவேகமான எழுத்தாளர் விவேகம் வாசுதேவன் லட்சுமணன் அவர்கள்
* நேசமான கவிதைகளால் நெஞ்சை நனைத்துச் சென்ற தோழி ஈரமான நினைவுகள் புனிதா! (விரைவில் திரும்பி விடுவார் எனும் நம்பிக்கையோடு)
***
* இந்தப் பத்தாவது விருதைப் பெறும் நண்பர் நான் மட்டுமே அறிந்தவர்! அவருக்கு என்னை தெரியாது என்றே நினைக்கிறேன், அவரை யாரென்று கூறும் முன் ஒரு பிளாஸ்பேக்...
சில காலங்களுக்கு முன்னாள், நமது மதிப்பிற்குரிய அய்யா திரு.மலாக்கா முத்துக்கிருக்ஷ்ணர் அவர்களின் அஞ்சல் ஒன்று அதிலே ஒரு பதிவு முகவரி அதற்கு முன் தமிழ்ப்பதிவுகளுடன் பரிட்சயமாகும் பாக்கியம் அமையவில்லை!அதை தட்டிப்பார்த்தால் கண்முன்னே அருமையான அந்தப் தமிழ்ப் பதிவு கண்சிமிட்டி வரவேற்கிறது! கருத்துக்களஞ்சியமாய் அற்புதமான பதிவுகள்!
அந்த வரலாற்றுப்பூர்வமான, விஞ்ஞானப்பூர்வமான, பூகோளப்பூர்வமான (அடக்கடவுளே!) நிகழ்ச்சிக்குப்பின் தொடங்கியது நமது தமிழ்ப்பதிவுலகுக்கு கக்ஷ்டகாலம் :( (பின்னே நாமலும் பதிவராயிட்டம்ல!)
திரு.மலாக்கா முத்துக்கிருக்ஷணர் அய்யா அவர்களின் விளக்க உரைகள், பதில்கள் ஆகியவற்றிலிருந்து பாடம் படித்துக்கொன்டு தொடங்கியது நமது பதிவுலக வாழ்வு!
அந்த அற்புதனமான பதிவர் வேறு யாருமில்லை நமது
* மாடப்புறா குமரன் மாரிமுத்து! அவர்கள்தான், நன்றி நண்பரே!
மேற்குறிப்பிட்ட நண்பர்களோடு நேரில் நட்பு பாராட்டிய அனுபவம் இல்லையெனினும் அவர்களின்
பதிவுகளின் வழி! பின்னூட்டங்களின் வழி அவர்களை நல்ல நண்பர்களாக அடையாளம் காண முடிகின்றது! மேலும் நாம் ஒரு "சைக்கிக்" சக்தி படைத்த டெலிபத்தி, எலிபத்தி போன்ற பல்வேறு மனதை ஊடுரும் மகா சக்திபடைத்த விக்ஷேச நபர் என்பது ஒரு கூடுதலான தகவல்(அதெல்லாம் சுத்தப் பொய்! நம்பாதீங்க, எத்தனை தூரமானாலும் உண்மை நட்பை உள்ளத்தால் உணர முடியுங்கிறது தானுங்க உண்மை!)
உண்மையில் சொல்லப்போனால் எல்லோருமே நண்பர்கள்தான், தமிழ்ப்பூங்காவின் ஓரத்திலே எனது வலைப்பட்டியல் வரிசையிலே நான் அமர்த்தியிருக்கும் அத்தனை பேரும் அடியேனின் நண்பர்களே! அவர்களில் சிலர் உயர்ந்த மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரியவர்கள்! தமிழக நல்ல நண்பர்களின் நட்பு தற்பொழுது வாய்த்ததில் நிரம்ப மகிழ்ச்சி! கூடிய விரைவில் அவர்களையும் தமிழ்ப்பூங்காவின் வலைப்பட்டியலில் அமரவைக்க வேலைகள் நடந்துகொன்டிருக்கின்றன! இப்போதைக்கு நான் அறிந்தவர்களையே வரிசைப்படுத்தியிருக்கிறேன்! தமிழ்ப் பதிவுலகக் கடலில் அறிய வேண்டியவர் அனேகம் பேர் இன்னும் உள்ளனர்!
சரி நண்பர்களே, இந்த பாராட்டு விழா இனிதே நடைபெற வருகை எனும் நன்கொடை கொடுத்து உதவிய நல் உள்ளங்களுக்கும், தலைமை தாங்கிய திருவாளர். "குறை ஒன்றும் இல்லை" அவர்களுக்கும் (அவர் அடியேனுக்கு விருது அளித்திருக்காவிட்டால் இந்த கும்மியே கிடையாது) ! நன்றி! நன்றி!
இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் பங்கு பெற்ற அனைவருக்கும் நமது நட்பெனும் பொன்முடிப்பும், அக்கரையெனும் பொன்னாடையும், கூடவே அவர்கள் பதிவில் இட்டுக்கொள்ள அழகான விருதுப்பட்டையும் வழங்கிச் சிறப்பிக்கப்படுகின்றது! இவர்களுக்கான சலுகைகள் பின்வருமாறு :
இவர்கள் பதிவு வெறும் வெள்ளைப்பக்கமாக ஒன்றுமே எழுதாது இருந்தாலும் நாம் அவர்களின் அந்தப் பதிவை ஆஹா ஓஹோ வெனப் புகழ்வோம்.
அடிக்கடி அவர்களின் பக்கங்களுக்கு விஜயமளித்து ஹீட்ஸ் கணக்கை ஏற்றுவோம்.
மற்றும் அடிக்கடி அவர்களின் பதிவுகளுக்குப் பின்னூட்டங்களை எக்கச்சக்கமாக வழங்கி மகிழ்விப்போம்.
விருது பெற்ற நண்பர்களே, மகிழ்ச்சிதானே!
சரி மீண்டும் அடுத்து ஒரு நிகழ்வில் சந்திப்போம், வணக்கம்.
நல்லது விருது பெற்ற நண்பர்களே, மேற்காணும் இந்த விருதை உங்கள் வலைப்பதிவின் ஓரத்தில் அழகாக ஒட்டிவிடுங்கள், பின்னர் நீங்களும் உங்கள் நண்பர்களாக 10 பேரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கும் இந்த விருதை வழங்கி அவர்களை மகிழ்வித்து தாங்களும் மகிழுங்கள்! நட்புக்குக் கைகொடுங்கள் நண்பர்களே!
பி.கு : விருது பெற்ற நண்பர்களுக்கும் ஏனைய எல்லோருக்கும், மறந்திராதீங்கப்பா , கம்பெனிக்கு உங்கள் அன்பும் ஆதரவும் இன்றுபோல் என்றும் தொடரட்டும்!
இப்படி ஒரு அன்பு எச்சரிக்கை நம்ம குறை ஒன்றும் இல்லாத, "குறை ஒன்றும் இல்லை" பதிவரிடமிருந்து! ஆத்தா கோபத்துக்கு ஆளாக முடியுமா? இரவாவது! தூக்கமாவது! பின்னங்கால் பிடரியில் பட எடுத்த ஓட்டம், குறை ஒன்றும் இல்லை பதிவில் நாம் அடுத்த நிமிடம்!
பார்த்தால் நண்பர் "குறை ஒன்றும் இல்லை" அவர்கள் அழகான ஒரு விருது அது நட்பைப் போற்றும் விருது என்பது அதன் தனிச்சிறப்பு, தூக்கிக் கையில் கொடுத்து நமை வாழ்த்த! அந்த "நொடி" உண்மையிலேயே மிகவும் உன்னதமான வாழ்க்கை "வானவெடி" போங்கள்!
சந்தோசம், சிரிப்பு, உற்சாகம், ஆனந்தக் கண்ணீர் என நவரசமாய் பொங்கிய பல உணர்ச்சிகளையும் பயங்கரமாய் கட்டுப் படுத்திக்கொன்டு, நண்பரின் விருதுக்கு ஒரு நன்றி பின்னூட்டம் நயமாக வைத்துவிட்டு, அவர் கொடுத்த விருதோடு, அக்கரை எனும் பொன்னாடை, நட்பு எனும் பணமுடிப்பு ஆகியவற்றையும் பெற்றுக்கொன்டு தமிழ்ப்பூங்காவிற்கு ஓடி வந்து சேர்ந்தேன்.
நேற்று இரவு நான் தூங்கியிருப்பேன் என்று நினைக்கிறீர்களா! அது தான் கிடையாது! சுத்தமாக ஒரு பொட்டு தூக்கமில்லை, "இதற்குமுன் விருது வாங்கிய அனுபவமே கிடையாதே அதனால்தான்" என நினைக்கிறீர்கள் அல்லவா, உண்மையாயிருந்தாலும் அது தவறு!
நிஜத்தில் என்னவென்றால் அடுத்தபடியாக நாமும் நமது நண்பர்களாக நாம் நினைப்பவர்களுக்கு, நம்மை நண்பராக ஏற்றுக் கொண்டவர்களுக்கு இதைக் கொடுத்து, அவரும் நம்மையும் ஒரு பொருட்டாக மதித்து இதை ஏற்றுக்கொன்டு, நம்மையும், நமது நட்பையும் கெளரவிக்க வேண்டுமே எனும் நினைப்பு!
மனம் கூட்டிக்கழித்து கணக்குப் போட்டதில் பல தேர்வுகளிலிருந்து சில முடிவுகள்! இவை அத்தனையும் சுய நினைவோடு, யாவரிடமும் கையூட்டு வாங்கிக்கொன்டு தேர்வுக்குழுவினரால்(அடியேன் மட்டுமே) பலவித குவிசுகள், சூடான கேள்விபதில்கள், குரோஸ் வேர்டு பரிட்சைகள், ஓட்டப்பந்தயங்கள் என திறமைக்கு சவாலான பரீட்சைகள் அனைத்தும் வைக்கப்பட்டு அதில் வெற்றிகரமாக ஜெயித்த வெற்றியாளர்கள் இவர்கள் என்பதையும் தெரிவித்துக்கொன்டு, இன்றைய நமது பாராட்டு விழா மேடைக்கு செல்வோம் வாருங்கள்!
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
மாலை மயங்கும் நேரம், இனிக்கும் இரவு தொடங்கும் நேரம், தமிழ்ப்பூங்கா, வண்ண விளக்குகள் அலங்கரிக்கப்பட்டு, நட்பைப்போற்றும் தலைவரின் தளபதிப்படப்பாடலான "காட்டுக்குயிலு மனசுக்குள்ளே... பாடல் சீடி தேயும்வரை திரும்பத் திரும்ப ஒலிபரப்பப்பட்டுக்கொன்டிருக்கிறது....பாராட்டு மேடையிலே தமிழ் கூறு நல்லுலகின் ஒட்டு மொத்த பிரபல்யங்களும் ஒன்றாக அமர்ந்திருக்கின்றனர்! அவர்களுக்கு நடுவே நிகழ்ச்சியைத் தலைமை தாங்க நமது சிறப்பு விருந்தினர் திருவாள்ர்."குறை ஒன்றும் இல்லை" அவர்கள் (நல்லவேளை, நைசா பாராட்டியாச்சு!இல்லேன்னா ஜக்கம்மாகிட்டே சொல்லிப்புடுவார் மனுக்ஷன்!)
மேலும் பூங்கா முழுக்க அழகழகாய் பல பதிவுலக தோழிகளும் "ஹேன்சம்", "மாச்சோ"வுமாக பல பதிவுலக காளையரும் இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொன்டிருக்கின்றனர்!
இந்த நிகழ்ச்சிக்காகவே வீட்டில் அழுது அடம்பிடித்து புது கோட்டு சூட்டெல்லாம் வாங்கிப் போட்டுக்கொன்டு கிளாமரான அவைத்தலைவராக வரவேற்புறை நிகழ்த்தத்துவங்கிய நம் திரு.தமிழ்வானன் அவர்கள் மைக்கைப் பிடித்து பேசுகிறார்... பேசுகிறார்... பேசிக்கொன்டேயிருக்கிறார்... அதற்குமேலும் பொறுக்க முடியாமல் பதிவர்கள் நால்வர் மேடைக்கு ஓடிப்போய் அவரை குண்டுக்கட்டாக கீழே தூக்கிவர, மைக்கை தரமாட்டேன் என அவர் அடம் பிடிக்க தமிழ்ப்பூங்காவே சில நேரம் ஆடிபோய்விட்டது போங்கள்!
அடுத்ததாக சிறப்புரையாற்ற ,நல்லவர் இதயத்தில் இருந்து வந்திருந்த திருவாளர்."குறை ஒன்றும் இல்லை" அவர்கள், எழுந்தார், மைக்கை கையிலெடுத்தார், அவர் உதிர்க்கப்போகும் உரைக்காக கூட்டம் மொத்தமும் கூர்மையாய் காதுகளைத் தீட்டிக் கொன்டு காத்திருக்க மனுக்ஷன் ஒரே வரி, அதிலும் மூன்றே சொற்கள் "குறை ஒன்றும் இல்லை" என சொல்லிவிட்டு வாத்தியார் எம்.ஜி.ஆர் அவர்கள் பாணியில் கூட்டத்தை நோக்கி கையை அசைத்து விடை பெற்றுக்கொன்டார்! கூட்டம் "ஙே" என்று சிறிது நேரம் விழித்து விட்டு அவ்ளோதான் உரை போலும் என முடிவுக்கு வந்து பலமாக கையை தட்டுகிறது...தட்டுகிறது...தட்டிக்கொன்டேயிருக்கிறது..., அதில் எங்கே திரும்பிவந்து பேச ஆரம்பித்துவிடப்போகிறாரோ எனும் பயமும் சற்று ஒளிந்திருந்ததை காண முடிந்தது! :)))
சரி அடுத்ததாக நிகழ்ச்சியின் உச்சக்கட்டமாக விருது வழங்கும் நிகழ்ச்சி! அழகான வெண்புறா நம்ம தோழி சுபாதான், நேர்த்தியாக சேலையில் விருதுகளை, தங்க வேட்டை ரம்யாவைவிட விலை அதிகமான நகை(புன்னகை தானுங்கோ) அணிந்து எல்லோரையும் கவர்ந்தபடி மேடையில் விருதுகளை தங்கத்தட்டில் வைத்துத் தர,
அதிகம் பேச மாட்டேன் என உத்தரவாதம்(கையெழுத்துப்பிரதியாக) வாங்கிக் கொள்ளப்பட்டு மீண்டும் திரு.தமிழ்வானன் அவர்கள் மேடையேறி மைக்கைப்பிடித்துக்கொன்டு நாம் எழுதிகொடுத்தபடி விருது பெற்ற பதிவர்களை மேடைக்கு அழைக்க, பிண்ணனியில் அவ்ர்களின் பதிவுகள், அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாய் வெண் திரையில் பிரதிபலிக்க...
இதோ எனக்கு நண்பர்களாக வாய்த்து என்னையும் நட்பையும் பெருமைபடுத்திய எனது நண்பர்கள் ...
* உரிமைக்குப் போராடும் நல்ல நண்பர் ஓலைச்சுவடி சதீசு குமார் அவர்கள்
* பதிவுலகப்புயல் நண்பர் வாழ்க்கைப்பயணம் விக்கினேசு அவர்கள்
* நல்லவர் இதயத்திலிருந்து நண்பர் "குறை ஒன்றும் இல்லை" அவர்கள்
* இலக்கிய நண்பர் கவித்தமிழ் கிருக்ஷ்ணா அவர்கள்
* என் உலகத்திலிருந்து அன்பு தோழி சுபா அவர்கள்
* பின்னூட்டப்புயல் நம்ம தல தமிழ்வானன் அவர்கள்
* பிறமொழிப் பதிவராயிருந்தும் தமிழ்ப்பூங்கா வாசகரான "ரஞ்சீதா'ஸ் கார்னர்" " ரஞ்சீதா அவர்கள்
* விவேகமான எழுத்தாளர் விவேகம் வாசுதேவன் லட்சுமணன் அவர்கள்
* நேசமான கவிதைகளால் நெஞ்சை நனைத்துச் சென்ற தோழி ஈரமான நினைவுகள் புனிதா! (விரைவில் திரும்பி விடுவார் எனும் நம்பிக்கையோடு)
***
* இந்தப் பத்தாவது விருதைப் பெறும் நண்பர் நான் மட்டுமே அறிந்தவர்! அவருக்கு என்னை தெரியாது என்றே நினைக்கிறேன், அவரை யாரென்று கூறும் முன் ஒரு பிளாஸ்பேக்...
சில காலங்களுக்கு முன்னாள், நமது மதிப்பிற்குரிய அய்யா திரு.மலாக்கா முத்துக்கிருக்ஷ்ணர் அவர்களின் அஞ்சல் ஒன்று அதிலே ஒரு பதிவு முகவரி அதற்கு முன் தமிழ்ப்பதிவுகளுடன் பரிட்சயமாகும் பாக்கியம் அமையவில்லை!அதை தட்டிப்பார்த்தால் கண்முன்னே அருமையான அந்தப் தமிழ்ப் பதிவு கண்சிமிட்டி வரவேற்கிறது! கருத்துக்களஞ்சியமாய் அற்புதமான பதிவுகள்!
அந்த வரலாற்றுப்பூர்வமான, விஞ்ஞானப்பூர்வமான, பூகோளப்பூர்வமான (அடக்கடவுளே!) நிகழ்ச்சிக்குப்பின் தொடங்கியது நமது தமிழ்ப்பதிவுலகுக்கு கக்ஷ்டகாலம் :( (பின்னே நாமலும் பதிவராயிட்டம்ல!)
திரு.மலாக்கா முத்துக்கிருக்ஷணர் அய்யா அவர்களின் விளக்க உரைகள், பதில்கள் ஆகியவற்றிலிருந்து பாடம் படித்துக்கொன்டு தொடங்கியது நமது பதிவுலக வாழ்வு!
அந்த அற்புதனமான பதிவர் வேறு யாருமில்லை நமது
* மாடப்புறா குமரன் மாரிமுத்து! அவர்கள்தான், நன்றி நண்பரே!
மேற்குறிப்பிட்ட நண்பர்களோடு நேரில் நட்பு பாராட்டிய அனுபவம் இல்லையெனினும் அவர்களின்
பதிவுகளின் வழி! பின்னூட்டங்களின் வழி அவர்களை நல்ல நண்பர்களாக அடையாளம் காண முடிகின்றது! மேலும் நாம் ஒரு "சைக்கிக்" சக்தி படைத்த டெலிபத்தி, எலிபத்தி போன்ற பல்வேறு மனதை ஊடுரும் மகா சக்திபடைத்த விக்ஷேச நபர் என்பது ஒரு கூடுதலான தகவல்(அதெல்லாம் சுத்தப் பொய்! நம்பாதீங்க, எத்தனை தூரமானாலும் உண்மை நட்பை உள்ளத்தால் உணர முடியுங்கிறது தானுங்க உண்மை!)
உண்மையில் சொல்லப்போனால் எல்லோருமே நண்பர்கள்தான், தமிழ்ப்பூங்காவின் ஓரத்திலே எனது வலைப்பட்டியல் வரிசையிலே நான் அமர்த்தியிருக்கும் அத்தனை பேரும் அடியேனின் நண்பர்களே! அவர்களில் சிலர் உயர்ந்த மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரியவர்கள்! தமிழக நல்ல நண்பர்களின் நட்பு தற்பொழுது வாய்த்ததில் நிரம்ப மகிழ்ச்சி! கூடிய விரைவில் அவர்களையும் தமிழ்ப்பூங்காவின் வலைப்பட்டியலில் அமரவைக்க வேலைகள் நடந்துகொன்டிருக்கின்றன! இப்போதைக்கு நான் அறிந்தவர்களையே வரிசைப்படுத்தியிருக்கிறேன்! தமிழ்ப் பதிவுலகக் கடலில் அறிய வேண்டியவர் அனேகம் பேர் இன்னும் உள்ளனர்!
சரி நண்பர்களே, இந்த பாராட்டு விழா இனிதே நடைபெற வருகை எனும் நன்கொடை கொடுத்து உதவிய நல் உள்ளங்களுக்கும், தலைமை தாங்கிய திருவாளர். "குறை ஒன்றும் இல்லை" அவர்களுக்கும் (அவர் அடியேனுக்கு விருது அளித்திருக்காவிட்டால் இந்த கும்மியே கிடையாது) ! நன்றி! நன்றி!
இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் பங்கு பெற்ற அனைவருக்கும் நமது நட்பெனும் பொன்முடிப்பும், அக்கரையெனும் பொன்னாடையும், கூடவே அவர்கள் பதிவில் இட்டுக்கொள்ள அழகான விருதுப்பட்டையும் வழங்கிச் சிறப்பிக்கப்படுகின்றது! இவர்களுக்கான சலுகைகள் பின்வருமாறு :
இவர்கள் பதிவு வெறும் வெள்ளைப்பக்கமாக ஒன்றுமே எழுதாது இருந்தாலும் நாம் அவர்களின் அந்தப் பதிவை ஆஹா ஓஹோ வெனப் புகழ்வோம்.
அடிக்கடி அவர்களின் பக்கங்களுக்கு விஜயமளித்து ஹீட்ஸ் கணக்கை ஏற்றுவோம்.
மற்றும் அடிக்கடி அவர்களின் பதிவுகளுக்குப் பின்னூட்டங்களை எக்கச்சக்கமாக வழங்கி மகிழ்விப்போம்.
விருது பெற்ற நண்பர்களே, மகிழ்ச்சிதானே!
சரி மீண்டும் அடுத்து ஒரு நிகழ்வில் சந்திப்போம், வணக்கம்.
நல்லது விருது பெற்ற நண்பர்களே, மேற்காணும் இந்த விருதை உங்கள் வலைப்பதிவின் ஓரத்தில் அழகாக ஒட்டிவிடுங்கள், பின்னர் நீங்களும் உங்கள் நண்பர்களாக 10 பேரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கும் இந்த விருதை வழங்கி அவர்களை மகிழ்வித்து தாங்களும் மகிழுங்கள்! நட்புக்குக் கைகொடுங்கள் நண்பர்களே!
பி.கு : விருது பெற்ற நண்பர்களுக்கும் ஏனைய எல்லோருக்கும், மறந்திராதீங்கப்பா , கம்பெனிக்கு உங்கள் அன்பும் ஆதரவும் இன்றுபோல் என்றும் தொடரட்டும்!
12 comments:
//அதில் எங்கே திரும்பிவந்து பேச ஆரம்பித்துவிடப்போகிறாரோ எனும் பயமும் சற்று ஒளிந்திருந்ததை காண முடிந்தது! //
கவுண்டர் : டேய் மண்டையா.. ஆள நல்லா பாதது வச்சுக்கோ.. அடுத்த பதிவில இவர் தான் நம்ம டார்கெட்..
அருமையான , தெளிவான, அழகான, சரளமான ,நகைச்சுவையான எழுத்து நடை உங்களுக்கு.. (அப்பாடா பதிலுக்கு பாராட்டியாச்சு!!)
//நேசமான கவிதைகளால் நெஞ்சை நனைத்துச் சென்ற தோழி ஈரமான நினைவுகள் புனிதா!(விரைவில் திரும்பி விடுவார் எனும் நம்பிக்கையோடு)//
Thanks :-)
:) சென்ஸ் ஆப் ஹூமர் நிறைய உங்களுக்கு :)
// புது கோட்டு சூட்டெல்லாம் வாங்கிப் போட்டுக்கொன்டு கிளாமரான //
சிவனேசு, ஆடி மாசம் மொட்ட வெயிலு மண்டைய பிளக்கறப்ப கூட நாட்ல நாங்கள்ளாம் யான் கோட்டு சூட்டு போட்டுகி அலையுறோம் தெரியும்மா?
நம்ம மாதிரி வெப்ப நாட்டுல கோட்டு போடரதுக்கு காரணம்
- உள்ள சட்டை கிழிஞ்சா தெரியாது
- சட்டையிலுள்ள அழுக்கு கறையை மறைக்க
- தினமும் அயன் (iron)போட தேவையில்ல
- நேத்து போட்ட சட்டைய இன்னிக்கும் போடலாம் முடிஞ்சா நாளைக்கும் ........
பொருளாதார மந்த நிலையில புதுசு புதுசா சட்டை வாங்க முடியுமா...
எங்க சிவனேசு கிளம்பிட்ட , கோட்டு வாங்குருதுக்கா?
குறை ஒன்றும் இல்லை !!!
//கவுண்டர் : டேய் மண்டையா.. ஆள நல்லா பாதது வச்சுக்கோ.. அடுத்த பதிவில இவர் தான் நம்ம டார்கெட்..//
தாயே ஜக்கம்மா! இந்தப் பச்ச புள்ளையே காப்பாத்தும்மா!
புனிதா||Punitha
ஹாய் புனிதா! உங்களைக் கண்டதில் மகிழ்ச்சி! விரைவில் உங்கள் கவிதைகளால் அசத்துங்கள்!
சுபா,
நன்றி தோழி! எதோ நம்மால முடிஞ்சது!
அன்புள்ள மகள் சிவனேஸ் அவர்களுக்கு,
உங்களுடைய வலைப்பதிவைத் தொடர்ந்து படித்து வருகிறேன். மிகவும் சரளமான நடை. நல்ல தமிழ். கணினி உலகம் இத்தனைச் சிறந்த தமிழ் ஆர்வலர்களை இவ்வளவு சீக்கிரத்தில் உருவாக்கிக் கொடுக்கும் என்று யாரும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். தமிழ் உலகம்கூட கற்பனை செய்து பார்த்திருக்காது.
ஒரு தகப்பனாரின் பார்வையில் இருந்து உன் எழுத்துகளைப் பார்க்கிறேன். படிக்கிறேன். அருமையான எழுத்துகள். பாராட்டுகள்!
இந்தக் கட்டத்தில் ‘மாடப்புறா’ நடத்திவரும் என்னுடைய மாணவர் (கெர்லிங் தமிழ்ப்பள்ளியில் 1981 ஆம் ஆண்டு) திரு.குமரன் அவர்களுக்கும்
பக்கத்து ஊர் கோப்பேங்கில் இருந்து கோலாலம்பூருக்குப் போய் ‘வாழ்க்கைப் பயணம்’ வலைப்பதிவை நடத்தி வரும் தம்பி திரு.விக்னேஸ் அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.
மலேசிய வலைப்பதிவு உலகில் நீங்கள் அனைவரும் சிறந்து விளங்க என்னுடைய வாழ்த்துகள். நீங்கள் தனித்து விடப்பட வில்லை. உங்களோடு நானும் வாழ்கிறேன்.
மலாக்கா முத்துக்கிருஷ்ணன், ஈப்போ, மலேசியா.
மலாக்கா முத்துக்கிருஷ்ணன்
நன்றி ஐயா, வாழ்த்த வயதில்லை, வணங்கித்தாள் பணிகின்றேன்!
tamilvanan
வாங்க தல! வாங்க! உங்களுக்கும் ஒரு விருது இருக்குள்ள! இந்தாங்க வாங்கிக்கங்க!, உங்கள் பின்னூட்டம் என்றுமே சூப்பர்தான் போங்க, நன்றி நண்பரே!
அன்பின் சிவனேசு,
தங்களின் அன்பிற்கு மிக நன்றி. தொடரட்டும் உங்கள் சேவை!
சதீசு குமார்
நன்றி நண்பரே, நிச்சயம் முயற்சி செய்வோம்!
Post a Comment