.

.
.

Thursday, July 23, 2009

"டெரரான நண்பருக்கு டெரிபளான ஒரு செய்தி..."


ஆஹா விக்கினேசுவுக்கும் சிவனேசுவுக்கும் சண்டை மாட்டிக்கிச்சி போலிருக்கே என ஆர்வாமாய் கச்சான், சுவைபானம் எல்லாத்தோடும் வந்து முதல் வரிசையில் ஆர்வமாய் அமர்ந்து கதைகேட்கும், ஸாரி, படிக்கும் அன்பர்களே, நண்பர்களே நீங்க‌ள் நினைப்ப‌துபோல் நிச்சய‌மாக‌ இது சன்டைமேடை அல்ல! அல்ல‌! அல்ல‌, அதோடு ந‌ல்ல‌ ந‌ண்ப‌ர் விக்கியோடு எந்த‌ ச‌ண்டை ச‌ச்ச‌ர‌வும் கிடையாது! நாங்க‌ள் ந‌ல்ல‌ ந‌ண்ப‌ர்க‌ளாக்கும்!

பின்னே ஏன் இந்த‌ சூடான‌ த‌லைப்பு? நீங்க‌ள் கேட்பீர்க‌ள் என்ப‌து புரிகிற‌து அதெல்லாம் உங்களை இங்கே இழுத்துவர செய்யப்பட்ட மறைமுக சதியேயன்றி வேறொன்றுமில்லை!

சரி நாம் விசயத்திற்கு வருவோம், நேற்று என்ன நடந்தது தெரியுமா?
மாலை மணி சுமார் 7.00 இருக்கும், ப‌டார், படீர், டபார், டுபீர் வேறொன்றுமில்லை, நேற்றைய பதிவை டைப் செய்து கொன்டிருக்கிறேன்.

கனினியில் ஒரு புதிய பதிவு ஓடிவந்து உட்காருகிறது, என்னவென்று பார்த்தால், நம்ம வாழ்க்கைப்பயணம் விக்கினேசு அவர்கள் தமது பதிவில் " நானும் டெரர் தான்... ஜீப்புல ஏறிக்கிறேன்... பார்த்துக்கோங்க" என ஒரே சத்தம், ஆஹா நேற்றுவரை ந‌ல்லாத்தானே இருந்தார் மனுக்ஷன் புதுசாக்கூட "மம்மி(அம்மா அப்படின்னு தப்பா நினைக்கக்கூடாது, இது பிரமீடு வாழ் மம்மி) பற்றியெல்லாம் புதுப் புது தகவல்லாம் சொன்னாரே, அவருக்கு என்னாச்சோ, ஏதாச்சோ என்று ஓட்டமாய் ஓடி அவர் பதிவைப் பார்த்தால், வாயெல்லாம் பல்லாக, முகமெல்லாம் மலர்ந்து தனக்குக் கிடைத்த "சுவாரஸ்ய பதிவுக்கான விருதை" கையில் பிடித்துக்கொன்டு மகிழ்ச்சியில் மிதந்து கொன்டிருந்தார்
அவருடைய பின்னூட்ட பதிவு மேடையில் ஒரே கூட்டம் வாழ்த்துச் சொல்லிக்கொன்டும், உற்சாகப்படுத்திப் பாராட்டிக்கொன்டும், ஒரே ஆரவாரம் போங்க!
நமது நண்பர் "சுவாரஸ்ய‌ பதிவு விருது" பெற்றிருக்கிறார், நம்ம பங்குக்கு ஏதாவது செய்யனுமே எனத்தோன்ற நாமும் பின்னூட்ட மேடைக்கு ஓடிச்சென்று (அவரைப் பாராட்டி ஒரு வாழ்த்துப்பா பாடலாம் என நினைத்தேன் ஆனால் பாருங்கள்! ஒரே கருத்து வரட்சி(புரட்சி இல்லேங்க!) ஐடியா வரவில்லை என்பதைத்தான் அழகுத்தமிழில் அப்படிச் சொன்னேனுங்க! சரி நம்மால் முடிந்தது என சூப்பராக "சூப்பரப்பு" என ஒரு மிக மிக நீளமான பின்னூட்டம் வைத்து விட்டு கூடவே அவர் விரும்பி கனவு கண்டபடியே "டெரர்" ஆகிவிட்டமைக்கு மனங்கனிந்த நல் வாழ்த்துக்களையும் அள்ளி அவர் கைகளில் திணித்துவிட்டு தமிழ்ப்பூங்காவிற்கு ஓடி வந்து சேர்ந்தேன்.

பிறகு யோசித்துப் பார்க்கையில் இன்றைக்கு நாமும் ஒரு பதிவிட‌வேண்டுமே? எதைப்பற்றி எழுதுவது? சரி இந்தப் பதிவை நண்பர் விக்கினேசு அவர்களுக்கு வாழ்த்துக்கூறும் ஒரு பதிவாக அமைத்துவிடுவோம் எனத் தோன்றவே, அப்படியே இந்தப் பதிவு நண்பருக்கான வாழ்த்துப் பதிவாக வடிவம் பெற்றுவிட்டது எனத் தெரிவித்துக்கொள்கிறோம். இதுதான் இந்தப் பதிவிற்கான கதைச்சுருக்கம். (என்னது கதைச்சுருக்கமா? அதற்கே இவ்வளவு பெரிய வள வளா பதிவா?)

ந‌ண்பர் விக்கினேசு அவ்ர்களைப்பற்றி ஒரு சில..., அடியேன் இந்த பதிவின் ஆரம்ப காலத்தில் பதிவிடத்துவங்கியபோது("ம்க்கும், இப்போ மட்டுமென்ன பல வருச‌மா ஆச்சு?, சில மாதந்தானே ஆகியிருக்கு!" என முகவாயை சிலர் தோள்பட்டையில் இடித்துக்கொள்வது தெரிகிறது!) நண்பர் விக்கினேசு பதிவு நுணுக்கங்கள் பலவற்றை பந்தா ஏதுமின்றி நம்மோடு பகிர்ந்துகொன்ட நல்ல மனம் படைத்த பாரி வள்ளல்! இன்னும் கடையேழு வள்ளல்கள் பெயரையும் சொல்லி அவரை வாழ்த்தலாம்தான் ஆனால் பதிவு நீளமாயிடும் பரவாயில்லையா? எனவே மிகப்பெரிய அர்த்தம் கொன்ட ஒரு சின்ன குறள்(என் குரல் சகிக்காது அதுவல்ல), இது திருக்குறள் "தினைத்துனை நன்றி செயினும் பனைத்துனையாக் கொள்வர் பயன் தெரிவார்" நன்றி நண்பரே!

இந்த நல்ல நண்பரிடம் மற்றொரு வழக்கம், யாராயிருந்தாலும் அவர் பதிவுக்கு பின்னூட்டமிட்டால், கண்டிப்பாக அவர்களை மதித்து பதில் பின்னூட்டம் இடுவார். சில சமயங்களில் விவாதம், ஜோக்குகள் எல்லாம் இவர் பதிவுப் பின்னூட்டங்களில் இடம் பெறுவதால் அதுவும் படிக்க மிகவும் சுவாரஸ்யமாகவே அமைந்திருக்கும். நாம் பல பதிவுகளைப் படிக்கிறோம், சிரமமெடுத்து நாம் படிக்கவும், தெரிந்து கொள்ளவும் தங்கள் பொழுதுகளை செலவிட்டு பல செய்திகளை சேகரித்து, முறையான எழுத்து வடிவமிட்டு நமக்காக படைக்கிறார்கள் என்பதால் கண்டிப்பாக, இதோ நானும் வந்தேன் இந்தப் பதிவைப் படித்தேன் என பதிவர்களுக்கு உணர்த்தும் வண்ணம் ஒரு பின்னூட்டமிடும் வாசிப்பாளார் உண்மையிலேயே மிகப்பெரிய உற்சாக சக்தியை அவர்களுக்கு வழங்குவதை உணர முடிகிறது. அப்படி வழங்கப்பட்ட பின்னூட்டத்திற்கு பதில் பின்னூட்டம் இடும் பதிவாள நண்பர்கள் நிச்சயம் பாராட்டுக்குரியவர்களே ஆவர் என்பது எனது தாழ்மையான கருத்தாகும். அதற்கும் உங்களுக்கு ஒரு ச‌பாக்ஷ் நண்பரே!

இப்படியாக நண்பர் விக்கினேசு பற்றி பதிவுலக வாயிலாக நானறிந்த சில விடயங்கள் மூலம் அவருக்கு நல்வாழ்த்துக்கள் கூறிக்கொன்டு, அவர் மேலும் பல்லாண்டு பல்லாண்டு பலகோடி நூறாண்டு, மனைவி மக்கள், பிள்ளை குட்டி, பேரன் பேத்தியெனப் பல்கிப்பெருகி மகிழ்ந்து வாழ மவுண்ட் ரோடு முனீஸ்வரனை வேண்டிக்கொன்டு, வலைப்பதிவுலகில் அவர் தல சிறந்து விளங்கி மேலும் சிற‌ந்த படைப்புகள் பல தந்து, "சுவாரஸ்ய பதிவு விருது" போலவே பட்டாம் பூச்சி விருது, தட்டாம் பூச்சி விருது என மேலும் பல விருதுகளைத் தொடர்ந்து பெற வேண்டுமெனக் கேட்டுக்கொன்டு
மீசிக் ஆரம்பம்.....

"சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு........!!!!!!!!!! என்ற தலைவர் பாடலை விக்கினேசுவுக்கு வாழ்த்துப்பாடலாக சமர்ப்பித்து விடைபெறுவோம்!

பி.கு :
வலைப்பதிவு பெருமககளுக்கு : விக்கினேசு மேலும் சிலருக்கு இந்த விருதை வழங்கவேண்டும், அவர் இப்பொழுது வழங்கவில்லை, தீபாவளிக்கோ, பொங்களுக்கோ வழங்கப்போகிறார் போலிருக்கிறது!, (வழங்கித்தான் ஆவார், பின்னே அதை வைத்து வீடா கட்டப் போறார்?), எனவே ஒரு குடும்பமாகிவிட்ட வலைப்பதிவுலக அன்பர்களே, கூடிய விரைவில் சிறந்த படைப்பைத்தரும் உங்களுக்கும் அவர் கையால் விருது கிடைக்கும்(அதற்கும் பதிவு போடுவோம்ல!), அதற்கான அட்வான்ஸ் வாழ்த்துகளோடு. மீண்டும் சந்திப்போம்.


விக்கிக்கு மட்டும் : (அப்புறம் போஸ்! நீங்க சொன்ன மாதிரியே பதிவை நெருப்பா போட்டுட்டோம்ல!, பேசியபடி அமெளண்ட்ட செட்டல் பன்னிறுங்க சரியா? அப்போ நான் உத்தரவு வாங்கிக்கிறேன்....)

20 comments:

Tamilvanan said...

பூங்காவில் புயல் - 1

என்னப்பா... மனசுக்கு அமைதியை தேடி பூங்காவுக்கு வந்தா , நீங்க உங்க பூங்காவுல டெரருக்கு இடம் கொடுத்து வச்சிரிக்கீங்க...அதுவும் அமெளண்ட்டுக்கு..... எந்த ஊரு ஞாயம்... சரி சரி நடந்தது நடந்துருச்சி அமெளண்ட்டு செட்டில் ஆன கையோட எனக்கு ஒரு கட்டு வெட்டிருனும்... அப்பத்தான் அமைதியா அமுக்கி வாசிப்பேன்

இல்ல கில்லனு சொன்ன ... பூங்காவில் புயல் அடிக்கும்...

Tamilvanan said...

பூங்காவில் புயல் - 2

எச்சரிக்கை

பூங்காவில் புயல் நிச்சயம் அடிக்கும்...

Tamilvanan said...

பூங்காவில் புயல் - 3

இறுதி எச்சரிக்கை

பூங்காவில் புயல் நிச்சயம் நிப்பாட்டாம்ம அடிக்கும்...

sivanes said...

சிவனேசு : வாங்க தல வாங்க, அதுக்கென்ன, தாராளமா! கவலையை மறந்து, கண்ணீரைத் துடைச்சிக்கங்க, உங்களுக்கு தராமலா?

மனசாட்சி : பிச்சையெடுக்குதாம் பெருமாளு, அதைப் பிடுங்குதாம் அனுமாரு!
காசு கிடைச்ச‌ கையோட‌ இவ‌ர் க‌ண்ணிலேயே ப‌டாம‌ உடனே எஸ்கேப் ஆயிர‌னும்!

Subha said...

:)

sivanes said...

வாங்க தோழி! உங்களுக்கும் நாளை ஒரு பதிவு போட்டுருவோம்ல!

VIKNESHWARAN ADAKKALAM said...

அட பாவமே இதுலாம் எப்போ நடந்தது??? ஒரு மொக்கை பதிவு போட்டா இப்படியா பதிவு போட்டு கும்மி அடிக்கிறது. இதுல அமொண்ட் வேறயா... பக்கத்துல ஒருத்தரு கட்டிங் வேற கேட்குறாரு... நான் ஊருக்கு போயிட்டு பத்து வருஷம் கழிச்சி வரேன்.

Anonymous said...

பதிவை நெருப்பா தான் போட்டுயிருக்கிங்க்க.....உங்கள் எழுத்து திறைமைக்கு
எனது வாழ்துக்ள் நண்பா.உங்களை உசிப்பி விட்ட நண்பர் விக்கிக்கும் எனது வாழ்துக்க்கள்.

Thamiz Priyan said...

தல... ஏற்கனவே நான் தந்த பணத்துக்கு இன்னும் பதிவு போடலை... அமெளண்டே தராத விக்கிக்கு பதிவு போட்டு இருக்கீங்க.. இது என்ன நியாயம் சொல்லுங்க?.. ;-))

Thamiz Priyan said...

விக்கிக்கு வாழ்த்துக்கள்!

VIKNESHWARAN ADAKKALAM said...

பட்டாம் பூச்சி தட்டாம் பூச்சி கரப்பான் பூச்சிலாம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாடியே புடிச்சாச்சுங்க...

அப்பாவி முரு said...

சுவாரசிய பதிவர் விருது வாங்கிய விக்கிக்கு இவ்வளவு எழுதியிருக்கீங்களே,
அதை அவருக்கு கொடுத்தவரைப் பத்தி எவ்வளவு எழுதுவீங்க??

:)

வால்பையன் said...

நடக்கட்டும் நடக்கட்டும்!

sivanes said...

VIKNESHWARAN

//நான் ஊருக்கு போயிட்டு பத்து வருஷம் கழிச்சி வரேன்.//

சிவனேசு :ஓடி ஒளிஞ்சாலும் தேடிக்கண்டுபிடிச்சு அமெளன்ட்ட கரந்துருவம்ல!

மனசாட்சி : போஸ்! உங்கள் நம்பித்தான் பதிவேப் போட்டிருக்கேன்!
பாவப்பட்டு பாத்து ஒதவிப் பண்ணுங்க!

sivanes said...

Anonymous

அநானி நண்பா தங்கள் வாழ்த்துக்கு நன்றி! இப்படியே அநானியா அடிக்கடி வந்து வாழ்த்துக்கள அள்ளி இரைச்சிட்டுப் போகோனும் சரியா?

sivanes said...

தமிழ் பிரியன்

ஆகா! அப்ப போன மாச‌ம் 32ம் தேதி உங்கள‌ ஆஹா ஓஹோன்னு புகழ்ந்து நான் போட்ட பதிவைப் நீங்க பார்க்கலேன்னு சொல்லுங்க! சரி சரி, திரும்பவும் ஒரு அமெளன்ட்ட வெட்டிருங்க, இந்த மாசம் 32ம் தேதி கண்டிப்பா உங்கள வாழ்த்தி ஒரு பெரிய பதிவ போட்டிருவேன், சரியா?

sivanes said...

VIKNESHWARAN
//பட்டாம் பூச்சி தட்டாம் பூச்சி கரப்பான் பூச்சிலாம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாடியே புடிச்சாச்சுங்க//

மனசாட்சி : நமக்கு இந்த விசயம் தெரியாதுன்னு காட்டிக்கவே கூடாது, சமாளி சிவனேசு! சமாளி!

சிவனேசு : அதானே பார்த்தேன், விக்கியா, கொக்கா!

sivanes said...

அப்பாவி முரு

//சுவாரசிய பதிவர் விருது வாங்கிய விக்கிக்கு இவ்வளவு எழுதியிருக்கீங்களே,
அதை அவருக்கு கொடுத்தவரைப் பத்தி எவ்வளவு எழுதுவீங்க??//

அமெளன்ட்ட வெட்டுங்க தல அப்புறம் பாருங்க, ஏதாவதொரு 32ம் தேதி எப்படி அசத்தலா உங்களப் போற்றிப் புகழ்ந்து பதிவு இடுவோம்னு!

sivanes said...

வால்பையன்

//நடக்கட்டும் நடக்கட்டும்!//

எல்லாம் உங்களைப்போன்ற பெரிய"வால்"களின் ஆசிர்வாதம் தான் தல!

sivanes said...

தமிழ்ப்பூங்காவில் பெரும் சூராவளி, அதிர்ச்சியில் சிவனேசு!

தமிழ்வாணன், சுபா, விக்கி, அநானி, தமிழ்ப்பிரியன், அப்பாவி முரு, வால்ப்பையன் என தமிழ்ப்பதிவுலகின் முண்ணனிப் புயல்களின் அதிரடியான கும்மியுடன் கூடிய வருகையால் தமிழ்ப்பூங்கா சிவனேசு தடுமாறி தலைசுற்றி மயக்கம்! எனினும் சமாளித்துவிட்டார்! மேலும் இதுபோன்ற புயல்களின் வருகையை எதிர்கொள்ளும் வகையில் பல பதிவுகளை வெளியிட வேண்டுமென அவர் கங்க‌ணம் கட்டிக்கொன்டார்! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே! அடிக்கடி வந்து இப்படி எட்டிப் பார்த்திட்டுப் கருத்து சொல்லிட்டுப் போகோனும் சரியா? (நாமும் எப்போதும் போல உங்க எல்லார் பதிவையும் படிச்சிக்கிட்டே இருப்போம்ல!)