.

.
.

Wednesday, June 10, 2009

தற்காப்புக்கலையும் தமிழ்ப்பெண்கள் நிலையும்!

இந்த ந‌வீன‌ யுக‌த்தில் ஒரு பெண் அதிலும் தமிழ்ப்பெண் த‌னிமனித வாழ்வில் எதிர்கொள்ளும் பிர‌ச்ச‌னைக‌ளை எழுத்தில் வ‌டித்து முடித்து விட‌ முடியாது, உலகம் முன்னேற்றமடைந்து வருகின்ற போதிலும் வாழ்வில் ந‌ம் பெண்க‌ளுக்கு துன்ப‌ங்க‌ளும், ஆப‌த்துக்க‌ளும் மேலும் மேலும் அதிகரித்த வண்ணமாக‌வே உள்ள‌ன. நாள்தோறும் நாளிதழ்களில் வெளியிடப்படும் செய்திகளில் அவர்களிடத்தில் மேற்கொள்ளப்பட்ட கொலை, கொள்ளை மற்றும் தாக்குதல்கள் இவற்றை மெய்ப்பிக்கின்றன.

இன்றைய சூழ்நிலையில் பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளை பாட்டுக்கும், பரதத்துக்கும் அனுப்புவதற்கு காட்டும் ஆர்வத்தை விட சிறுவ‌ய‌து முத‌லே அவ‌ர்க‌ள் பிள்ளைக‌ள் த‌ற்காப்புக்கலையில் தேர்ச்சி பெற ஆர்வம் காட்டினால் சிறப்பாக இருக்குமே என்று தோன்றுகிறது!

த‌ற்காப்புக்க‌லை த‌ன்ன‌ம்பிக்கையோடு, உட‌ல் வ‌லிமையையும், முன்யோச‌னையையும் அளிக்கிற‌து என்றால் அது மிகையாகாது. தன்னை தற்காத்துக்கொள்ளும் திறமையற்ற பெண்ணுடைய க‌ற்பிற்கும், உயிருக்கும், உட‌மைக‌ளுக்கும் இந்த உலகில் உத்திர‌வாத‌ம் இல்லை! இது ப‌ய‌முறுத்துவ‌த‌ற்காக‌ கூற‌ப்ப‌ட்ட‌து என‌ த‌ய‌வுசெய்து எண்ண‌வேண்டாம்.

இதெல்லாம் உண்மையில்லை, நாங்க‌ள் எங்க‌ள் பெண்பிள்ளைக‌ளை க‌ண்ணின் க‌ரும‌ணிபோல் பாதுகாத்து வ‌ள‌ர்ப்போம், ஆப‌த்து என்ற‌ பேச்சுக்கே இட‌மில்லை என்று கூறும் பெற்றோர்க‌ளே! த‌ய‌வு செய்து கேளுங்க‌ள்!
எத்த‌னை கால‌ம் நீங்க‌ள் உங்க‌ள் பெண்க‌ளுக்கு பாதுகாப்பாக‌ இருக்க‌ முடியும், அப்ப‌டியே இருந்தாலும், உங்க‌ள் வாழ்க்கை முடிந்த‌பின் அவ‌ள் நிலை? திரும‌ண‌ம் செய்திருந்தாலும் விதிவ‌ச‌த்தால் அவ‌ள் த‌னிமையாக்க‌ப்ப‌ட்டாள் அவ‌ள் நிலை? த‌ய‌வு செய்து யோசியுங்க‌ள் பெற்றோர்க‌ளே!

பள்ளிக்கூடங்களில் த‌ற்பொழுது தற்காப்புக்கலைகள் குறைந்த கட்டணத்தில் கற்றுத்தரப்படுகின்றன. ஆனால் கல்வியமைச்சு புறப்பாடத்திட்டத்தில் இந்த தற்காப்புக்கலையையும் ஒரு பாடமாக்கும் முறையை அறிமுகப்படுத்தினால் அது எல்லா வகையிலும் பயனளிப்பதாய் அமையும்.

உங்க‌ள் குழந்தைக‌ளை த‌ற்காப்புக்க‌லையில் ஈடுப‌டுத்துவ‌த‌ன் மூல‌ம், பெற்றோர்களாகிய‌ நீங்க‌ள் அவ‌ர்க‌ளுக்கும் அவ‌ர்க‌ளின் எதிர்கால‌த்திற்கும் மிக‌ப்பெரிய‌ ந‌ன்மையை செய்கிறீர்க‌ள் என்ப‌தை உண‌ருங்க‌ள்!

2 comments:

VIKNESHWARAN ADAKKALAM said...

இளகுவான எழுத்து நடை... தற்காப்புக் கலை என்பது ஆண் பெண் என இருபாலருக்கும் அவசியமானதே.

sivanes said...

உண்மைதான் விக்னேக்ஷ்வரன், ஆபத்துக்கள் அதிகரித்து வரும் காலக்கட்டத்தில், ஆண் பிள்ளைகளும் தங்களையும், தங்களை சேர்ந்தவர்களையும், காப்பாற்ற கண்டிப்பாக தற்காப்புக்கலை பயில வேண்டும்.